Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
13
உலகத் தலைவர்களையும் விட்டுவைக்காத 'கொரோனா' - சிக்கியோர் யார்...யார்...???

Sooriyan Gossip - உலகத் தலைவர்களையும் விட்டுவைக்காத 'கொரோனா' - சிக்கியோர் யார்...யார்...???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

304 Views
உலகத்தையே உலுக்கிப் போட்டிருக்கும் COVID -19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கமானது, வளர்ச்சியடைந்த நாடுகள் தொடக்கம் வளர்ந்துவரும் நாடுகள் வரை எங்கேயும் வியாபித்து அனைவரையும் பயத்தில் உறைய வைத்திருக்கின்றது.
இந்த வைரஸ் தொற்றானது, சாமானியர்களை மட்டுமல்லாது பல நாடுகளின் மக்கள் பிரதிநிதிகள் உட்பட உலகத் தலைவர்கள் மாறும் அவர்களது குடும்பத்தை சார்ந்த பலருக்கும் தாக்கியிருப்பதாகவும், அதற்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும் இணையத்தினூடாக செய்திகள் வெளியாகின்றன. முதலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக வதந்திகள் வெளியாகின. அதனை வெள்ளைமாளிகை மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்தநிலையில், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார் என செய்திகள் கிளம்பியுள்ளன. இது தொடர்பில், கனேடிய பிரதமருக்கான வைத்தியர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், "பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு 'கொவிட் 19' வைரஸ் தொற்றுக்கான எந்த அறிகுறிகளும் இல்லாமல் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார்.

எனினும் அவரது ஆரோக்கியத்திற்கானதும், பாதுகாப்பு கருதியும் முன்னெச்சரிக்கைச் செயற்பாடாக வைத்தியர்களின் ஆலோசனையின்படி, அவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார். தற்போதுவரைக்கும் அவருக்கு வைரஸ் தொற்று குறித்த எந்தவித அறிகுறிகளும் காணப்படாமையினால், எந்தவித மருத்துவ
பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படமாட்டாது.

கனடா நாட்டின் தலைவர் என்பதன் காரணமாக, அண்மையில் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்த எவருக்கேனும் கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டால், அந்த பயம் தேவையற்ற ஒன்று. எனவே, அண்மையில் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்தவர்கள் வீண் குழப்பமடையத் தேவையில்லை என்று அவரது வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இது இப்படியிருக்க, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரகரி உடலில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு தொற்று ஏற்பட்டமைக்கான அறிகுறிகள் காணப்பட்டதால், அவர் தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார். இருந்தும், ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை. உடல்நிலையில் சிறப்பாகவே உள்ளார் என்றும், நோய் தொற்றுக்கான அறிகுறிகள் சிறிய அளவிலேயே காணப்படுவதால் வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து மருத்துவ முறைகளையும் தொடர்ந்து கடைப்பிடிக்கின்றார் என்று பிரதமரின் தகவல் தொடர்பு இயக்குனர் கமரோன் மொஹமட் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top