Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
29
கொரோனாவினால் மூதாட்டி தற்கொலை

Sooriyan Gossip - கொரோனாவினால் மூதாட்டி தற்கொலைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,408 Views
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 900  க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும் கொரோனா வைரசால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.  வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வைரஸ் பரவும் வேகத்தை விட வைரஸ் தொடர்பான பீதி மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா குறித்து தகவல் அறிந்த பெண் அச்சம் காரணமாக ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கோலாபூர் மாவட்டம் ஷிரோலி பகுதியை சேர்ந்த பெண் மலுபாய் அக்ரம் அவாலி (68). இவர் காவலாளி வேலை செய்துவரும் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். மலுபாய்க்கு ஒரு பேரன் உள்ளார்.இதற்கிடையே, ஊரடங்கு காரணமாக மலுபாயின் மகன் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மகன் வீட்டில் இருப்பதற்கான காரணம் என்ன என்று தனது பேரனிடம் மலுபாய் விசாரித்துள்ளார்.

அப்போது தனது பாட்டி மலுபாயிடம் கொரோனா வைரஸ் குறித்தும் அதனால் உலகம் முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் பேரன் விரிவாக கூறியுள்ளான். இந்த தகவலை கேட்ட மலுபாய் வைரஸ் குறித்த அச்சத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக மிகவும் ஆபத்தான முடிவெடுத்த மலுபாய் அக்ரம் அவாலி கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டின் பகுதி அருகே ஓடும் பஞ்சகங்கா நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top