Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
01
ரஷ்ய பிரதமரையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ்.

SooriyanFM Gossip - ரஷ்ய பிரதமரையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

511 Views
ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷ_ஸ்டினுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷியாவில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 498 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 7 ஆயிரத்து 99 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்த நாட்டில் கொரோனா வைரசால் இதுவரை ஆயிரத்து 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ரஷியாவின் பிரதமர் மிக்கைல் மிஷ_ஸ்டினும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

54 வயதான அவர் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதியே ரஷியாவின் பிரதமராக பதவியேற்றார்.

வைரஸ் பாதிப்பு உறுதியானதையடுத்து ரஷியாவின் பிரதமர் மிக்கைல் மிஷ_ஸ்டின் தன்னைத்தானே தனிமைபடுத்தி கொண்டுள்ளார்.

வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தி கொண்டாலும் அரசின் கொள்கைகளில் முக்கிய முடிவுகள் எடுக்கும் நேரங்களில் காணொளி தொழில்நுட்பம் மூலம் பங்கேற்பதாக அவர் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், கொரோனா பரவிய பிரதமர் மிக்கைல் மிஷ_ஸ்டின் வைரசில் இருந்து விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவார் என ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, உலகலாவிய ரீதியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்தை கடந்துள்ளது.

அதேநேரம் இந்த தொற்றால் இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரத்து 839 பேர் பலியாகியுள்ளனர்.

எனினும் உலகலாவிய ரீதியில் இதுவரை 10 லட்சத்து 39 ஆயிரத்து 144 பேர் கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top