Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
04
இத்தாலியில் வீரியம் இழக்கும் கொரோனா.

Sooriyan Gossip - இத்தாலியில் வீரியம் இழக்கும் கொரோனா.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,187 Views
இத்தாலி,  பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் குறைந்து வருகின்றது.

நேற்றைய தினம் பிரான்ஸில் 135 பேரும், ஸ்பெயினில் 164 பேரும், இத்தாலியில் 174 பேரும் இந்த தொற்றால் பலியாகியுள்ளனர்.

கடந்த மாதத்தின் நடுப்பகுதியுடன் ஒப்பிடும் போது இறப்பு விகிதம் குறைந்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய அந்த நாடுகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் எளிதாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் பிருத்தானியாவில் மாத்திரமே கொவிட் 19 தொற்றால் ஓரளவு பலி எண்ணிக்கை பதிவாகின்றது.

அங்கு நேற்றைய தினம் இந்த தொற்றால் 315 பேர் பலியாகியுள்ளனர்.

எனினும் பிருத்தானியாவில் புதிய தொற்றுதியானவர்கள் குறைந்து வருவதாக அந்த நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தற்போது ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்றது.

அங்கு நேற்றைய தினம் மாத்திரம் 10 ஆயிரத்து 633 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய ரஷ்யாவில் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 647 ஆக அதிகரித்துள்ளது.

எனினும் அந்த நாட்டில் இறப்பு விகிதம் குறைந்தளவே பதிவாகியுள்ளது.

ரஷ்யாவில் இதுவரை ஆயிரத்து 180 பேரே இந்த தொற்றால் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் தொற்காசிய நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்றது.

இந்தியாவில் நேற்றைய தினம் மாத்திரம் 2 ஆயிரத்து 806 பேர் இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதற்கமைய அங்கு இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் மாத்திரம் இந்தியாவில் கொவிட் 19 தொற்றால் 68 பேர் பலியாகியுள்ளதுடன் இதுவரை அங்கு ஆயிரத்து 391 பேர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

அந்த நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் புதிதாக ஆயிரத்து 62 பேர் இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் இதுவரை பாகிஸ்தானில் கொவிட் 19 தொற்றால் 457 பேர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவிலேயே அதிகளவானோர் பலியாகியுள்ளனர்.

அங்கு இந்த தொற்றால் புதிதாக ஆயிரத்து 122 பேர் பலியாகியுள்ள நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 566 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் அந்த நாட்டில் 26 ஆயிரத்து 459 பேர் இந்த தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவில் கொவிட் 19 தொற்றுதியானவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 87 ஆயிரத்து 233 ஆக அதிகரித்துள்ளது.
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top