Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
06
அமெரிக்காவில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகின்றன.

Sooriyan Gossip - அமெரிக்காவில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகின்றன.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

260 Views
எதிர்வரும் சில வாரங்களில் அமெரிக்க வெள்ளை மாளிகை கொரோனா தடுப்பு செயலணி,  செயலிழக்கும் என அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். 

அந்த நாட்டு துணை ஜனாதிபதி மைக் பேன்ஷின் இன் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரிசோனாவிலுள்ள முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிற்கு சென்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அத்துடன் மீண்டும் நாட்டை கட்டியெழுப்புவோம் எனவும் அவர் இதன் போது கூறியுள்ளார்.

அமெரிக்காவில் நாளொன்றுக்கு 20 ஆயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்படுகின்றது.
அத்துடன் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகுவதாக ஜோன்ஸ் ஹெப்கின்ஸ் (துழாளெ ர்ழிமiளெ) பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வர்த்தகங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்து 321 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றுறுதியான 24 ஆயிரத்து 210 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளதோடு 12 லட்சத்து 37 ஆயிரத்து 47 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top