Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
07
3 கோடி பெறுமதியான காரைக் கொள்வனவு செய்ய, 5 வயது சிறுவன் தனியே சென்ற சுவாரஸ்ய சம்பவம்

Sooriyan Gossip - 3 கோடி பெறுமதியான காரைக் கொள்வனவு செய்ய, 5 வயது சிறுவன் தனியே சென்ற சுவாரஸ்ய சம்பவம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,263 Views
அமெரிக்காவில் உட்டா மாகாணத்தில் உள்ள வீதியில், வீதி விதி முறைகளை பின்பற்றாது சென்ற காரை சோதனை செய்ததில் அந்த காரை வெறும் 5  வயது சிறுவன் செலுத்திச் சென்ற சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளது. 

போக்குவரத்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினருக்கு வீதி விதிமுறைகளை மீறி கார் ஒன்று வேகமாக செல்வதை அவதானிக்க முடிந்தது. இதன் காரணமாக குறித்த காரை விரட்டிப் பிடித்த காவல்துறையினர், காரின் உட்பகுதியில் சோதனை செய்ததில் பெரியவர்கள் யாரும் இல்லாமல் அந்த காரை வெறும் 5 வயது சிறுவன் செலுத்தி வந்தமை கண்டறியப்பட்டது.
 
 
இதையடுத்து காவல்துறையினர் அந்த சிறுவனிடம் இது யாருடைய கார்? காரை எடுத்துக்கொண்டு எங்கே தனியாக செல்கிறாய்? என்று கேட்டனர். அதற்கு சிறுவன் அளித்த பதிலை கேட்டு காவல்துறையினருக்கு தலை சுற்றியது.
 
இந்த கார் தனது பெற்றோருடையது என்றும், தனக்காக விலை உயர்ந்த சொகுசு காரான லம்போர்கினி மொடல் காரை வாங்க கலிபோர்னியாவுக்கு சென்று கொண்டிருப்பதாகவும் சிறுவன் கூறினான்.
 
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அந்த சிறுவனிடம் நடத்திய சோதனையில் அவன் வெறும் 3 அமெரிக்க டொலர்களை மட்டுமே வைத்திருந்தது தெரியவந்தது.
 
உண்மையில் அந்தக் கார் இலங்கைப் பெறுமதிக்கு கிட்டத்தட்ட 3  கோடி ரூபா வரும் என்று கூறப்படுகின்றது. 
 
இதையடுத்து சிறுவனின் பெற்றோரை வரவழைத்த காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, சிறுவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top