Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
08
இந்தியாவில் டிசம்பர் வரையில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் - யுனிசெப் எச்சரித்துள்ளது.

sooriyan news - இந்தியாவில் டிசம்பர் வரையில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் - யுனிசெப் எச்சரித்துள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

237 Views
இந்த கொரோனா வைரஸ் தொற்று மென்மேலும் பரவாமல் தடுப்பதற்காக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் ஊரடங்கு நடவடிக்கையை எடுத்தது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இந்த நிலையில், உலகமெங்கும் பெண்கள் கருத்தரிப்பது அதிகமாகும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இந்த கர்ப்பங்களால் உலகமெங்கும் 11 கோடியே 60 லட்சம் குழந்தைகள் பிறக்கப்போகின்றன. இந்தியாவை பொறுத்தமட்டில், கொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்ட பின்னர் 9 மாதங்களில் இதுவரை இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையில் குழந்தை பிறப்பு இருக்கும், அதாவது, டிசம்பர் வரையில் 2 கோடியே 10 லட்சம் குழந்தைகள் பிறக்கும் என்று ஐ.நா.வின் குழந்தைகள் நிதி அமைப்பு ''யுனிசெப்'' கணித்துள்ளது.

இதே போன்று கொரோனா வைரஸ் பரவிய நாடான சீனாவில் 1 கோடியே 35 லட்சம் குழந்தைகள் பிறக்கும். நைஜீரியாவில் 64 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 50 லட்சம் குழந்தைகளும், இந்தோனேசியாவில் 40 லட்சம் குழந்தைகளும் பிறக்கும் என்று யுனிசெப் கூறி உள்ளது.
எதிர்பார்க்கப்படுகிற குழந்தைகளின் எண்ணிக்கையில் 6-வது இடத்தில் உள்ள அமெரிக்க நாட்டில் 32 லட்சம் குழந்தைகள் பிறக்கும்.

இந்த நாடுகளில் எல்லாம் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தோன்றுவதற்கு முன்பாகவே புதிதாக பிறந்த குழந்தைகளின் இறப்புவீதம் அதிக அளவில் இருந்ததாகவும், இது கொரோனா வைரஸ் பரவியுள்ள சூழ்நிலையில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் யுனிசெப் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் 2 கோடியே 41 லட்சம் குழந்தைகள் பிறக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் பிரசவ பராமரிப்பு, உயிர்காக்கும் சுகாதார சேவைகள் பாதிக்கும், கர்ப்பிணிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பும் உள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.
இதன் காரணமாக பணக்கார நாடுகள் கூட பாதிப்புக்கு ஆளாகுமாம்.
புதிய தாய்மார்களும், புதிய குழந்தைகளும் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள கடுமையான எதார்த்தங்களுக்கு மத்தியில் வரும் சூழல் உருவாகும்.

இதையொட்டி யுனிசெப் அமைப்பின் செயல் இயக்குனர் ஹென்ரிட்டா போரே கூறியதாவது:-

உலகமெங்கும் கோடிக்கணக்கான பெண்கள் தாயாகும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் சுகாதார மையங்களுக்கு செல்லலாம். அவர்கள் சுகாதார பணிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் அவசர சிகிச்சையை இழக்க நேரிடலாம். எந்த ஒரு சூழலிலும் இப்போது அமையக்கூடிய வாழ்க்கை சூழலுக்கு அவர்கள் தங்களை பக்குவப்படுத்தி கொண்டு தயாராக வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுநோய் சூழல், தாய்மை அடைவதை மறுபரிசீலனை செய்ய வைக்கும் என்றெல்லாம் கற்பனை செய்ய முடியாது. இந்த ஆண்டு சர்வதேச அன்னையர் தினம் ஒரு கடுமையான தினமாக அமைகிறது. ஏனென்றால், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பல குடும்பங்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இது ஒற்றுமைக்கான நேரம். அனைவரையும் ஒன்றிணைக்கும் நேரம்.

ஒவ்வொரு கர்ப்பிணி தாயும், அவளுக்கு தேவையான ஆதரவை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் அடுத்தடுத்த மாதங்களில் பாதுகாப்பாக குழந்தை பிறக்கவும், உயிரைக்காப்பாற்றவும் நாங்கள் உதவ முடியும்.என்று அவர் கூறினார்.

வரும் மாதங்களில் உயிர்களை காப்பதற்கு அரசாங்கங்கள் தேவையான சுகாதார பராமரிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று யுனிசெப் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளை பெறவும் நல்ல விதமாக குழந்தைகளை பெற்றெடுக்கவும், பிரசவத்துக்கு பிந்தைய கவனிப்புகளை சரியாக பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யுனிசெப் கேட்டுக்கொண்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top