Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
18
பிரதமருக்கு அனுமதி மறுத்த உணவகம்...#Coronavirus

sooriyan gossip - பிரதமருக்கு அனுமதி மறுத்த உணவகம்...#CoronavirusSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,428 Views
அனைத்து நாடுகளைப் போலவே நியூஸிலாந்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,499 - ஆக உள்ளது.அதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்,1,433 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்னும் சிலர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.அந்நாட்டு அரசால் எடுக்கப்பட்ட மிகக் கடுமையான நடவடிக்கைகளால் அங்கு வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் கொரோனா இல்லாத நியூஸிலாந்து உருவாகும் என பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமூக விலகல் என்பதுதான் அந்நாட்டின் முக்கிய தாரக மந்திரமாக உள்ளது.எனவே,முதல்கட்ட தளர்வில் பொதுமக்கள் கட்டாய சமூக இடைவெளியுடன் வெளியில் நடமாடலாம்,உணவகங்கள்,போக்குவரத்து போன்றவற்றில் எண்ணிக்கையில் கட்டுப்பாடு,சில தொழில்கள் இயங்க அனுமதி,ஆகிய பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் நியூஸிலாந்து பிரதமர்.கொரோனாவை வெற்றிகரமாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில்,அந்நாட்டு பிரதமர் விதித்த கட்டுப்பாடுகளால் அவருக்கே ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.கடந்த சனிக்கிழமையன்று,நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன்,தன் வருங்கால கணவர் கிளார்க் கேஃபோர்ட் மற்றும் சில நண்பர்களுடன் அந்நாட்டு தலைநகரான வெல்லிங்டனில் இருக்கும் ஒரு கஃபேவுக்குச் சென்றுள்ளார்.நியூஸிலாந்து அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே உணவகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.அந்த வகையில், பிரதமர் ஜெசிந்தா அங்கு சென்றபோது அனைத்து இருக்கைகளும் நிரம்பி இருந்துள்ளன.

இதனால் பிரதமரை உள்ளே அனுமதிக்க முடியாது என அந்த கஃபே நிர்வாகம் தெரிவித்துள்ளது.எந்த விதிமுறைகளையும் மீறாமல்,எதையும் மாற்றாமல்,சிறிது நேரம் அங்கேயே காத்திருந்து பின் இருக்கை கிடைத்ததும் உணவு உண்டுவிட்டுச் சென்றுள்ளார் ஜெசிந்தா.அந்த கஃபேயில் நடந்த அனைத்து சம்பவங்களையும் நேரில் பார்த்த ஒரு வாடிக்கையாளர்,தன் ட்விட்டர் பக்கத்தில் அதைப் பதிவிட்டுள்ளார்.இதற்கு,ஜெசிந்தாவின் வருங்கால கணவர் கிளார்க் பதில் அளித்துள்ளார். 

அதில்,“இந்தக் குழப்பத்துக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்.சரியான முறையில் இதைக் கையாளத் தவறிவிட்டேன்,முன்கூட்டியே இருக்கை புக் செய்யவில்லை.ஆனால்,அவர்களுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார். நியூஸிலாந்து பிரதமரின் செயலைப் பாராட்டியும்,அனைத்து ஆண்களும் இறுதியில் இப்படித்தான் செய்வார்கள் எனவும் ஜெசிந்தாவின் காதலரை கிண்டல் செய்தும் நெட்டிசன்கள் கருத்து பகிர்ந்துவருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top