Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
31
சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.

Sooriyan Gossip - சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

544 Views
இளைஞர்களை புகையிலை நிறுவனத்தின் பிழையான வழிகாட்டலில் இருந்து பாதுகாத்து, அவர்களின் பாவனையை தடுப்போம்' என்பது உலக சுகாதார நிறுவனத்தின் இந்த ஆண்டுக்கான தொனிப்பொருளாகும்.

புகைத்தலினால் நாளாந்தம் சுமார் 55 இலங்கையர்கள் மரணிப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

வருடத்திற்கு சாரசரியாக 20 ஆயிரம் இலங்கையர்கள் மரணிக்கின்றனர்.

சர்வதேச ரீதியில் புகைத்தல் பாவனையினால் 08 மில்லியன் பேர் மரணிக்கின்றனர் என உலகசுகாதார ஸ்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.

அவற்றுள் 09 இலட்சம் பேர் இரண்டாம் நிலை புகைத்தலினால் மரணிக்கின்றனர்.

இன்றைய உலகில் மனிதசமுதாயத்தின் இதுபோன்ற கொடூர மரணத்திற்கு உள்ளாட்டு யுத்தங்களோ அல்லது வேறு எந்த காரணிகளும் தாக்கம் செலுத்தவில்லை என்பது தெளிவாக புலப்படுவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் ஏற்படும் சுகாதார, பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்கு காரணமாக அமையும் புகையிலை பாவனையை கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கடந்த 2003ம் ஆண்டு புகையிலை தடுப்பு தொடர்பிலான சர்வதேச ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

இது வரையில் 168 நாடுகள் அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

2003ம் ஆண்டிலேயே இலங்கை அந்த ஒப்பந்தத்தில்; கைச்சாத்திட்டது.


சிறுவயது தொடக்கம் பிள்ளைகளின் மனதில்; சிகரட் பாவனை தொடர்பாக சாதகமான சிந்தனையை ஏற்படுத்தி அவர்களை தங்களின்; வாடிக்கையாளர்களாக மாற்றுவதற்கு பல்வேறு வியாபார நுணுக்கங்களையும், விளம்பரங்களையும் சிகரட் நிறுவனம் மேற்கொள்கின்றன.

இதனாலேயே இம்முறை இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

விளம்பரங்களிற்கு சிகரட் நிறுவனம்;; 23 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருடாந்தம் செவழிக்கின்றது.

அதேபோன்று சிகரட் புகைப்பது இளைஞர்களின் உரிமை என்ற போலியான கூற்றை நம்பவைப்பதற்காக, வருடாந்தம் 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழிக்கப்படுகின்றன.

இலங்கையில் இயங்கும் பல்தேசிய புகையிலை நிறுவனம் எமது நாட்டின் சிறுவர்களையும், இளைஞர்களையும் ஏமாற்றுவதை நோக்காகக் கொண்டு பல்வேறு தந்திரோபாயங்களை பயன்படுத்துவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

சமூகவலைதளங்கள், ஊடகங்கள் வாயிலாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் புகையிலை பாவனையை கவர்ச்சிகரமான ஒன்றாக சித்தரித்தல்.

இளைஞர்கள், சிறுவர்கள் அதிகம் செல்லும் இடங்களில் 'வயது குறைந்தோருக்கு விற்பனை தடை'எனும் வாசகத்தை காட்சிப்படுத்துவதன் மூலம் புகைத்தல் மீது மேலும் ஒரு குதூகலத்தை ஏற்படுத்துகின்றதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் ஆய்விற்கேற்ப, உலகளாவிய ரீதியில் இளைஞர்களின் புகைத்தல் பாவனையானது சடுதியாக குறைவடைந்து வருகின்றது.

புகைத்தல் பாவனையில் ஈடுபடுவோரும் அதிலிருந்து விடுதலையாவதற்கு சுயமாக முன்வருகின்றமை மிகவும் சாதகமான நிலைமையாகும்.

இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்தமையினால் சிகரட் நிறுவனத்தின் தந்திரோபாயங்களிற்கு அகப்படுவதானது சடுதியாக குறைவடைந்து வருகின்றது.

அத்தோடு சிகரட் நிறுவனத்தின் தந்திரோபாயங்களுக்கு எதிரான மாபெரும் எழுச்சியினை இளைஞர்கள் மத்தியில் காணமுடிகின்றது.

இந்த சாதகமான நிலைமையை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதற்காகவும், மேலும் இளைஞர்களும், சிறுவர்களும் புகைத்தல் பாவனைக்கு ஈர்க்கப்படுவதைக் குறைத்துக் கொள்வதற்காகவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் சில பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன.

தனிசிகரட் மற்றும் புகைப்பொருட்களின் விற்பனையைத் தடைசெய்தல்

கல்வி நிறுவனங்களிலிருந்து 100 மீற்றர்களுக்கு இடைப்பட்ட தூரத்தில் புகைப்பொருட்களின் விற்பனையைத் தடைசெய்தல்.

சிகரட்டின் மீதான அதிகரிக்கக்கூடிய குறைந்தபட்ச விலையையேனும் நிர்ணயிப்பதன் மூலம் குறைந்த விலையில் மேற்கொள்ள முனையும் சிகரட் விற்பனையை தடுக்கலாம்.

வெற்றுப்பொதியிடல் முறைமை அங்கீகரிக்கப்படல்.

பாடசாலைச் சூழலில் மாணவர்களை ஏமாற்றும் வகையில் ஏற்படுத்தப்படும் அனைத்து விதமான புகையிலை மற்றும் புகைத்தல் விளம்பரங்கள் தொடர்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்தல்.

இணையத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும் விளம்பரங்களை தடுப்பதற்காக புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளல்.

அந்த சட்டம் மீறப்படும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுத்தல்.

போன்ற செயற்பாடுகளின் மூலம் எமது நாட்டின் இளைஞர்களையும், சிறுவர்களையும் அதிலிருந்து பாதுகாப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

இளைஞர்களை புகைத்தலிற்கு ஆளாக்குவோர் எவராக இருந்தாலும், இனம், மதம், கட்சி பேதமின்றி வெளிக்கொணர வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் வலியுறுத்தியுள்ளது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top