Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
01
கொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.

Sooriyan Gossip - கொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

326 Views
கொவிட்-19 காரணமாக பிரேஷிலில் பலியாகின்றவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொவிட்-19 தாக்கம் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்ற நாடுகளின் பட்டியலில் பிரேஷில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

எவ்வாறாயினும் அதிகமாக கொரோனா தொற்றுறுதியான நாடுகளின் பட்டியலில் பிரேஷில் இரண்டாம் இடத்திலுள்ளது.

கொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.
அத்துடன் மேலும் 16 ஆயிரத்து 409 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
இந்தநிலையில் பிரேஷிலில் இதுவரையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 14 ஆயிரத்து 849 ஆக அதிகரி;த்துள்ளதோடு 29 ஆயிரத்து 314 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
இதேவேளை அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட் 633 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனடிப்படையில் அமெரிக்காவில் இதுவரையில் 18 லட்சத்து 37 ஆயிரத்து 525 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதோடு 1 லட்சத்து 6 ஆயிரத்து 190 பேர் பலியாகியுள்ளனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் 46 வயதான கறுப்பின ஜியோஜ் புயோயிட் காவல்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வேளை மரணமானதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்களும் வன் செயல் சம்பவங்களும் வலுப்பெற்றுள்ளன.


ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும்;, காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள வன்முறை தாக்குதலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கில் அமெரிக்காவின் 30 இற்கும் மேற்பட்ட பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறை வாகனம் பலவற்றிற்கு தீமூட்டி எரித்துள்ளனர்.

காவல்துறையினர் பல நகரங்களில் கண்ணீர் புகை பிரயோகம், மற்றும் இறப்பர் குண்டு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், சில காவல்துறை அதிகாரிகள் பதவியில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

சிக்காகோவில் ஆர்ப்பாட்டக்காரர்கள், காவல்துறையினரை கல் எறிந்து தாக்கியுள்ளனர்.

ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லொஸ் ஏஞ்சலீசில் காவல்துறையினரின் பல வாகனங்கள் தீயூட்டப்பட்டுள்ளன.

இந்தநிலையில் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 62 லட்சத்து 59 ஆயிரத்து 533 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியில் இதுவரையில் 3 லட்சத்து 73 ஆயிரத்து 691 பேர் பலியாகியுள்ளனர்.

எவ்வாறாயினும் சர்வதேச ரீதியில் 27 லட்சத்து 85 ஆயிரத்து 465 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top