Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
02
இந்த வருடம் கிரிக்கெட்டை தவிர்க்கும் தோனி - சொல்கின்றார் சாக்‌ஷி

Sooriyan Gossip - இந்த வருடம் கிரிக்கெட்டை தவிர்க்கும் தோனி - சொல்கின்றார் சாக்‌ஷிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

175 Views
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரும் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரருமான மஹேந்திரசிங் டோனி பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் எப்போதும் பேசுபொருளாகவே உள்ளன. காரணம், தோனியை நேசிக்கும் ரசிகர் வட்டம் மிகப்பெரியது.
இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் நேரலை ஊடாக தொகுப்பாளர் ரூபா ரமணி மற்றும் மஹேந்திரசிங் தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி ஆகியோர் இணைந்து பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில், தனது கணவர் மஹேந்திரசிங் தோனி பற்றி சாக்‌ஷி பகிர்ந்துகொண்ட விஷயங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலடைந்து வருகின்றன.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள இந்தக் காலப்பகுதியில், தமது குடும்பம் பற்றியும், கணவரது கிரிக்கெட் வாழ்க்கை பற்றியும் சாக்‌ஷி தோனி குறிப்பிடுகையில், ‘‘டோனி குறித்த விஷயங்கள் எங்கிருந்துதான் வருகிறது எனத் தெரியவில்லை. ஆனால் உங்கள் மீது ஊடக வெளிச்சம் இருக்கும்போது நீங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். மக்கள் ஒவ்வொருவரும் அவர்களது கருத்துகளை முன் வைப்பார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட டோனியின் ஓய்வு குறித்த வதந்திகள் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தன. எது நடந்தாலும் சரி எனக்கு என் தொலைபேசிக்கு அழைப்பும் மற்றும் குறுஞ்செய்தியும் வந்த வண்ணம் உள்ளன.

நாங்கள் சிஎஸ்கேவை மிகவும் மிஸ் செய்கிறோம். ஐபிஎல் போட்டிகள் நடக்குமா அல்லது நடக்காதா எனத் தெரியவில்லை. எனது மகளும் சிஎஸ்கே குறித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறாள். இருப்பினும் என்ன நடந்தாலும் இந்த வருடம் கிரிக்கெட் இல்லை. காரணம் நாங்கள் முன்னதாகவே வரும் நாட்களை எங்கே செலவு செய்யப்போகிறோம் என்பது குறித்துத் திட்டமிட்டு விட்டோம்.

கிரிக்கெட் இருந்தால் இருக்கும். ஆனால் டோனி வரும் நாட்களை மலையேற்றத்திற்குத் திட்டமிட்டு இருக்கிறார். நாங்கள் உத்தரகாண்ட் செல்ல இருக்கிறோம். அங்குள்ள ஒரு சிறிய கிராமத்தில் தங்குவதற்கும் திட்டமிட்டுள்ளோம். இது மட்டுமன்றி சாலை பயணங்களை மேற்கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறோம்.

இந்த ஊரடங்கு நாட்களில் டோனியின் மன அழுத்தத்தை வீடியோ கேம்கள்தான் பெருமளவு குறைத்தன. குறிப்பாக பப்ஜி. எங்களது படுக்கைகளை பப்ஜிதான் ஆக்கிரமித்துள்ளது’’ என்கிறார் மஹேந்திரசிங் தோனியின் மனைவி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top