900 அடி நீளமுள்ள பனிப்பாறை ஒன்று முதல் முறையாக கடந்த 2017ம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ஒமூவாமூவா பனிப்பாறை என பெயரிடப்பட்டது.
ஒமூவாமூவா பனிப்பாறையில் ஹைட்ரஜன் வாயுதான் முழுமையாக உள்ளது. இந்த பனிப்பாறை தற்போது சூரிய மண்டலத்திற்குள் நுழைந்துள்ளது. ஹைட்ரஜன் பனிப்பாறை ஒன்று, சூரிய மண்டலத்திற்குள் நுழைவது இதுவே முதல் முறை. தற்போது சனிக்கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள பனிப்பாறை, 10 ஆண்டுக்குப்பின் அதை கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.