Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
09
உதவி செய்து உள்ளம் மகிழ்ந்த கொமெடி நடிகர் சூரி.

Sooriyan Gossip - உதவி செய்து உள்ளம் மகிழ்ந்த கொமெடி நடிகர் சூரி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

257 Views
நகைச்சுவையில் கலக்கிக்கொண்டிருக்கும் கொமெடி நடிகர் சூரி தற்போது கை நிறைய காசு வைத்திருந்தாலும், திரைத்துறைக்கு வர முன்னர் வறுமையான குடும்ப பின்னணியை கொண்டவர்.
ஆரம்பத்தில் சின்ன சின்ன காட்சிகளுக்குள் திரையில் வந்து போன சூரி, தனது விடாமுயற்சியினால் மெல்ல மெல்ல முன்னேறி தற்போது தமிழ்த் திரையுலகின் முன்னணி கொமெடி நடிகர்களுள் ஒருவராக, கதாநாயகனுடன் இணைந்து படம் நெடுகிலும் பெருமளவு காட்சிகளில் தோன்றும் அளவிற்கு வளர்ந்து நிற்கின்றார்.

திரைத்துறையில் இவ்வளவு பெரிய அளவிற்கு முன்னுக்கு வந்த பின்னும் தலைக்கனமற்ற கலைஞனாக இருக்கும் சூரி, மனிதாபிமானம் கொண்ட ஒரு நல்ல மனிதனும் கூட. இவர் அண்மையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையர்களுக்கான தனது தலைமையிலான கொரோனா உதவி நிவாரணம் வழங்கும் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டார். அங்கு அவர்கள் முன் உரையாற்றுகையில், "எனது அக்கா, தங்கைகளான திருநங்கையர்களுக்கும், எனது அண்ணன் தம்பிகளான மாற்றுதிறனாளிகளுக்கும் எனது வணக்கங்கள். எல்லோரும் நல்லா இருக்கீங்கன்னு நம்புறேன். இந்த நேரத்தில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் எனக்கு சந்தோஷம், அதே நேரத்தில் எனக்கு கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது. நாமெல்லாம் சந்திப்பதற்கு இப்படி ஒரு காலகட்டம் உருவாகியிருக்கக்கூடாது.

கடந்த 3 மாதத்தில் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சேர்ந்து படித்த ஒரே பாடம் இந்த கொரோனாதான். 'தேவையின்றி வெளியே வராதீர்கள், உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்' என நமக்கு அடிக்கடி உணர்த்தியவர்கள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் தான். அவர்களுக்கு குடும்பம் இருந்தும் பொதுமக்களுக்காக அவர்கள் ஆற்றும் பணிக்கு எனது மனமார்ந்த நன்றிகள். என் சினிமா குடும்பம் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள், துணை நடிகர்கள், நாடக நடிகர்கள், சினிமா துறையை சார்ந்த என் நண்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் என்னால் ஆன உதவியை நான் செய்துள்ளேன், செய்து கொண்டும் இருக்கிறேன்.

நமது உயிரை காக்க நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசு கூறும் அறிவுரைகளை கடைப்பிடிப்போம். பயப்படாமல் இருங்கள், அதே நேரத்தில் மெத்தனமாக இருக்காதீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுங்கள். மீண்டும் நாம் அனைவரும் இயல்பு நிலைக்கு வர அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று கூறி அங்கிருந்தவர்களின் பேரன்பை தனதாக்கிக்கொண்டார் நடிகர் சூரி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top