Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
10
ஆபத்தான நிலையில் பிரபல பெண் இயக்குனர் - 'டயட்' செய்த வேலை

Sooriyan Gossip - ஆபத்தான நிலையில் பிரபல பெண் இயக்குனர் - 'டயட்' செய்த வேலைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

269 Views
திரைத்துறை சார்ந்த நடிகர் நடிகைகள் படங்களில் தாம் ஏற்கும் கதாபாத்திரத்திற்கேற்ப தமது உடல் எடையை கூட்டுவதும் குறைப்பதும் சாதாரணமாக நடைபெறும் விஷயம் ஒன்றே. ஆனால், திரைப்பட இயக்குநர்களோ தயாரிப்பாளர்களோ இவ்வாறான விஷயங்களில் ஈடுபடுவது இல்லை.
அபூர்வமாக ஒரு சிலர் இப்படியான வேலையில் நேரம் செலவிடுவதுண்டு. அந்தவகையில், ஒரு பெண் இயக்குனர் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தென்னிந்தியா திரைத்துறை தகவல்கள் சொல்கின்றன.

தெலுங்குத் திரையுலகில் முன்னணி இயக்குநராக இருக்கின்ற சஞ்சனா ரெட்டி, "ராஜூ காடு" என்கிற தெலுங்குமொழித் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பெரிதும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதோடு, பளுதூக்கும் போட்டியில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கிவருகின்றார்.

இந்தநிலையில், தனது உடல் எடையை குறைத்து 'ஸ்லிம்' ஆகும் முயற்சியையும் மேற்கொண்டுவந்த சஞ்சனா ரெட்டி, உடல் நலம் பாதிக்கப்பட்டு திடீரென வீட்டில் மயக்கமடைந்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இவ்வாறு ஆரோக்கியக்கோளாறு ஏற்படக் காரணம், 'டயட்' காரணமாக கடந்த மூன்று நாள்களாக வெறும் திரவ உணவுகளை மட்டுமே உட்கொண்டமை என்று அவருக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியர்கள் கூறுகின்றனர்.

இது இப்படியிருக்க, இயக்குனர் சஞ்சனா ரெட்டியின் தற்போதைய நிலை பற்றிய செய்திகள் குழப்பமானவையாகவே கிடைக்கின்றன. ஏனெனில், சஞ்சனா ரெட்டியின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், வெண்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக்கருவியின் மூலம் சுவாசம் வழங்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்படுவதாக சஞ்சனா ரெட்டி அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை கூறுகின்றது.

இதுபற்றி, சஞ்சனா ரெட்டி தற்போது இயக்கும் திரைப்படமான 'கர்ணம் மல்லேஸ்வரி' படத்தின் தயாரிப்பாளர் சொல்கையில், "எவரும் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. மருத்துவமனையிலிருந்து சஞ்சனா ரெட்டி இன்றையதினமே வீடு திரும்பிவிடுவார். எனவே குழப்பமடையத் தேவையில்லை" என்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top