Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
12
திரை காணாவிட்டாலும் சாதனை படைக்கும் "மாஸ்டர்" - சொல்கின்றது SONY

Sooriyan Gossip - திரை காணாவிட்டாலும் சாதனை படைக்கும் "மாஸ்டர்" - சொல்கின்றது SONYSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

177 Views
'தளபதி' விஜய் நடிப்பில் உருவாகி முழுமையடைந்து வெளியீட்டுக்குத் தயார் நிலையில் இருந்தாலும், கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக திரை காண்பதில் சிக்கல் நிலையில் உள்ளது "மாஸ்டர்" திரைப்படம். 
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் தளபதிக்கு ஜோடி போட நடிகை மாளவிகா மேனன் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் உள்ளதுடன், வில்லனாக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்திருக்கின்றார். இவர்களுடன், கதாநாயக நடிகர் சாந்தனுவும் மிக முக்கிய பாத்திரம் ஏற்றிருப்பதாக படக்குழு சொல்கின்றது.

இந்தநிலையில், கடந்த பெப்ரவரி 14ம் திகதி தளபதி விஜய் பாடிய "மாஸ்டர்" திரைப்படத்தின் ’குட்டி ஸ்டோரி’ பாடலை காதலர் தினத்தை முன்னிட்டு தயாரிப்புத் தரப்பு
யூடியூப் தளத்தின் மூலம் வெளியிட்டிருந்தது. அந்தப் பாடல் இசை ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிலையில் தற்போதுவரை 60மில்லியன் முறை பார்க்கப்பட்ட காணொளியாக புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கின்றது.

இளைய தலைமுறை ரசிகர்களின் மனத்துக்குப் பிடித்த வகையில் பாடல்களை உருவாக்கும் இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான இந்தப்பாடலை பிரபல நிறுவனமான SONY வெளியிட்டிருந்ததுடன், குறித்த சாதனை பற்றியும் தமது உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top