Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
16
தற்கொலை எண்ணம் தவறானது - நடிகை அமலா போல்.

Sooriyan Gossip - தற்கொலை எண்ணம் தவறானது - நடிகை அமலா போல்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

135 Views
பொலிவூட் எனப்படும் ஹிந்தி திரையுலகில் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை மரணம் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், குறித்த மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் ஒரு பக்கம்  காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொள்ள, பல்வேறு விதமான ஊகங்களும் வரிசை கட்டி வெளியாகின்றன.
இது இப்படியிருக்க, இந்த தற்கொலை பற்றிய கருத்துக்களை திரைத்துறை சார்ந்த பலரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் சமூக வலைத்தளப் பக்கங்களினூடாக பதிவிட்டுவருகின்றனர். பொதுவெளியில் விமர்சனங்களை எதிர்கொள்ள விரும்பாத சில பிரபலங்கள் மறைமுகமான கருத்துப் பகிர்வுகளை மேற்கொள்கின்ற நிலையில், நடிகை அமலா போல் தனது டுவிட்டர் பக்கத்தினூடாக தற்கொலை தொடர்பான பொதுவான கருத்தொன்றை ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கின்றார்.

அந்தப் பதிவில், "ஒரு சிலர் தாங்கள் வாழும் மதிப்புமிக்க வருடங்களை இழந்துவிட்டு இறப்பில் அமைதியை தேடுகின்றனர். ஆனால் ஏன் நீங்கள் வாழும் போது அமைதியாக, நிம்மதியாக வாழ முயற்சிக்க கூடாது? இந்த உலகம் உங்களுக்காக நிறைய செய்வதற்காக காத்திருக்கிறது" என குறிப்பிட்டு, நடிகர் சுஷாந்த் சிங் இறந்த சில மணிநேரத்தில் பதிவிட்டிருந்தார்.

இதேவேளை, நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை மரணத்துக்கு அதீத மன அழுத்தம் தான் காரணம் என்றும் கூறப்படுகின்ற நிலையில், பட வாய்ப்புக்களும் பெரிதாக இல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஏற்பட்ட பல பிரச்சனைகளால் நடிகை அமலா போல் கூட சில காலமாக அதீத மன அழுத்தத்திற்கு உள்ளானதுடன், இமயமலைப் பிரதேசம் மற்றும் ஆச்சிரமங்கள் என மன அமைதி தேடி பயணம் மேற்கொண்டு தற்போது கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார் என்கின்றது கோடம்பாக்கம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top