Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
16
'பெண்குயின்' பற்றி மனம் திறந்த கீர்த்தி சுரேஷ் - சொன்னது என்ன...?

Sooriyan Gossip - 'பெண்குயின்' பற்றி மனம் திறந்த கீர்த்தி சுரேஷ் - சொன்னது என்ன...?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

157 Views
தமிழ்த் திரையுலகில் பெரும் போட்டிக்கு மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து, அதை தக்க வைக்க பெரும் பிரயத்தனத்துடன் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் "பெண்குயின்" என்ற திரைப்படம் உருவாகியுள்ளதுடன், இந்தப் படத்தின் விளம்பர முன்னோட்டக் காட்சியை, திரையுலகின் நட்சத்திர நாயகிகளாக ஜொலிக்கும் 4 கதாநாயகிகளை வைத்து ஒரு சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தனர். அத்துடன், இணையத்தினூடான ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் எதிர்வரும் 19ம் திகதியன்று "பெண்குயின்" திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்தநிலையில், படத்தின் விளம்பரப்படுத்தலுக்காக பேட்டியொன்றை வழங்கியிருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். அதில், படத்தின் இயக்குனர் பற்றி கேட்கப்பட்டபோது, "இந்தப் படத்தின் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் புதுமுக இயக்குனர். யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை. என்னிடம் கதையை 4.30 மணி நேரம் சொன்னார். கேட்டவுடன் உடனே ஒப்புக் கொண்டேன். படப்பிடிப்பு தளத்தில் நினைத்ததை முடித்து காட்டினார். 10 படங்களுக்கு ஒர்க் பண்ண அனுபவம் அவரிடம் இருக்கிறது. அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு" என பதிலளித்தார் கீர்த்தி சுரேஷ்.

அத்துடன், இந்தப் படத்தில் அம்மா வேடமேற்றிருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், "கதை கேட்கும் போது எனக்கு அம்மா வேடம் பற்றி எதுவும் தோன்றவில்லை. இப்போது எல்லாரும் கேட்கும் போதுதான் அம்மா வேடம் பற்றி தோன்றுகிறது. கதை கேட்கும் போது ஏன் பண்ண கூடாது என்றுதான் மனதில் ஓடியது. நான் 10, 15 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடிக்கவில்லை. சின்ன குழந்தைக்கு தான் அம்மா வேடமாக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெரியதாக தோன்றவில்லை" என்று வெகு இயல்பாக கூறினார் சாமியின் இன்னொரு மாமி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top