Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
முடிவுக்கு வந்தது குழப்பநிலை - ஞானவேல்ராஜா தயாரிப்பில் மீண்டும் சிம்பு

Sooriyan Gossip - முடிவுக்கு வந்தது குழப்பநிலை - ஞானவேல்ராஜா தயாரிப்பில் மீண்டும் சிம்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

129 Views
'Studio Green' தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ஒன்று படமாகிக்கொண்டிருந்த நிலையில், நடிகர் சிம்புவுக்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் சிலகாலம் படப்பிடிப்பு இடைநிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகின்றது.
கன்னடத்தில் "முஃப்தி" என்ற பெயரில் வெளியான திரைப்படத்தின் தமிழ் மீளுருவாக்கமாக படமாகிக்கொண்டிருந்த இந்தப் படத்தில், நடிகர் சிம்புவுடன் மிக முக்கிய பாத்திரமேற்று கெளதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்க ஆரம்பிக்கப்பட்ட படப்பிடிப்பு, ஒரு சில காட்சிகளை கர்நாடக மாநிலத்தின் சில இடங்களில் படமாக்கிய நிலையில் சிம்பு மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பத்தால் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்பட்டது.

இது இப்படியிருக்க, கன்னடப் படப்பிடிப்பின் குழப்பத்தையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழில் உருவாகும் தனது புதிய படத்தில் நடிப்பதற்கான முனைப்பில் இறங்கிய நடிகர் சிம்பு, தற்போது "மாநாடு" படத்தில் நடித்து வருகின்றார். அத்துடன், "மஹா" என்ற திரைப்படத்திலும் நடித்தார்.

நடிகர் சிம்புவுக்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும் இடையிலான குழப்பம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், தற்போது நிலவும் கொரானா வைரஸ் தொற்றுநிலை ஓரளவுக்கு தணிய ஆரம்பித்தவுடன் மீண்டும் "முஃப்தி" மீளுருவாக்கமாக வரவிருக்கும் இந்த திரைப்படப் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என்றும் திரைத்துறை தகவல்கள் சொல்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top