Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
மீண்டும் திருமண பந்தத்தில் இணையவிருக்கும் வனிதா விஜயகுமார்.

Sooriyan Gossip - மீண்டும் திருமண பந்தத்தில் இணையவிருக்கும் வனிதா விஜயகுமார்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

242 Views
தமிழ்த் திரைத்துறையில் நுழைந்து தமது திறமையை வெளிப்படுத்தி பெரும் திரை நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்ற கனவுடன் ஆயிரக்கணக்கானோர் தினமும் கோடம்பாக்க வீதிகளில் அலைந்துகொண்டிருக்க,
திரைத்துறைப் பின்னணியை கொண்ட குடும்பத்தில் பிறந்திருந்தாலும் திரையில் ஜொலிக்கத் தவறியவர்களில் நடிகர் விஜயகுமார் குடும்பத்தின் வாரிசுகளும் உள்ளடக்கம்.

நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகியோர் பெரும் நட்சத்திரங்களாக திரைவானில் மின்னினாலும், விஜயகுமாரின் மகனான அருண் விஜய் மட்டுமே இன்னமும் திரைத்துறைக்குள் தனது இருப்பை தக்கவைத்துக்கொண்டு இருப்பதுடன், வசூல் நட்சத்திரம் என்ற பெயரையும் பெருமையையும் தேடிக்கொள்ள இன்னமும் முழுமுயற்சியில் ஈடுபடுகின்றார்.

இதேவேளை, திரையில் அவ்வளவாக ஜொலிக்காவிட்டாலும் 'பிக்பொஸ்' நிகழ்ச்சி மூலமாகவும், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பங்கள் மூலமும் அதிகம் பேசப்பட்ட, விஜயகுமாரின் மகள்களில் ஒருவரான வனிதா விஜயகுமார் தற்போது தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருக்கின்றார்.

காரணம், ஏற்கனவே இரண்டுமுறை திருமணமாகி இருவரையும் விவாகரத்து செய்துள்ள வனிதா தற்போது 3வது முறையாக திருமண பந்தத்தில் இணையவிருக்கின்றார். அத்துடன் 2 பிள்ளைகளுக்கு இவர் தாயாகவும் உள்ள நிலையில், அந்தக் குழந்தைகள் தற்போது தமது தந்தையுடன் வாழ்கின்றனர்.

இந்தநிலையில், தற்போதைய தனது புதிய வாழ்க்கைத் துணை யாக பீட்டர் போல் என்பவரையே வனிதா விஜயகுமார் கரம்பற்றப் போவதாக விஷயமறிந்த தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், இன்னமும் தனது புதிய துணையின் பெயரை கூறாத வனிதா விஜயகுமார், தனது வாழ்க்கைத்துணை பற்றி குறிப்பிடுகையில், "அவர் ஒரு சினிமா தொழில் நுட்ப கலைஞர். வெளிவர இருக்கும் படங்கள் மூலம் வெகு விரைவில் அவர் யாரென நீங்களாகவே தெரிந்து கொள்வீர்கள்" என்கிறார் சர்ச்சைகளின் சொந்தக்காரி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top