Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
19
ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது இயக்குனரின் மறைவு - சச்சி காலமானார்

Sooriyan Gossip - ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது இயக்குனரின் மறைவு - சச்சி காலமானார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

210 Views
இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணிப்பவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் வேறு நோய்களின் தாக்கத்தால் ஏற்படும் சில உயிரிழப்புகளும் கவலையை மேலும் அதிகரிக்கின்றது.
முகமறியாத பலரின் மரண செய்திகளை கேட்கும்போதே மனதில் ஏதோ ஒருவித இனம்புரியாத வலி ஏற்படும் நிலையில், கொஞ்சம் தெரிந்து கொண்ட ஒருவர் மரணித்துவிட்டால், உள்ளத்தில் ஏற்படும் கவலை சொல்லில் அடங்காதது. அப்படியானதொரு வலியை மலையாள திரைப்பட ரசிகர்களின் மனங்களில் ஏற்படுத்திவிட்டு சென்றிருக்கின்றார் பிரபல இயக்குனர் சச்சி என்கின்ற கே.ஆர்.சச்சிதானந்தம்.

"ஐயப்பனும் கோஷியும்" என்ற சூப்பர்ஹிட் மலையாளத்து திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் அதீத வரவேற்பைப்பெற்ற இயக்குனர் சச்சி திடீரென உடல்நலம் குன்றிய நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதுடன், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் மூலம் இதயத்துடிப்பில் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு வைத்தியர்களின் கண்காணிப்பில் இருப்பதாக முன்னர் குறிப்பிட்டிருந்தோம்.

இந்தநிலையில், எப்படியும் அவர் உடல்நலம் தேறி மீண்டு வந்து விடுவார் என்ற எதிர்பார்ப்புடன் பிரார்த்தனையோடு அவரது ரசிகர்கள் காத்திருக்க, எல்லோரது எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி இவ்வுலக வாழ்விலிருந்து நிரந்தமாக விடை பெற்றிருக்கின்றார் இயக்குனர் சச்சி. இன்னும் பல திரைப்படங்கள் மூலமாக தங்களை மகிழ்ச்சிப்படுத்துவார் சச்சி என்று காத்திருந்த அவரது நலன்விரும்பிகள் அனைவருக்கும் கவலையை கொடுத்து 48வது வயதில் நிறைவு பெற்றிருக்கின்றது மலையாளத்து திரையுலகின் ஆளுமை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top