Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
22
'மின்மினி'க்காக காத்திருக்கும் இயக்குனர் சங்கர் - காரணம் என்ன....???

Sooriyan Gossip - 'மின்மினி'க்காக காத்திருக்கும் இயக்குனர் சங்கர் - காரணம் என்ன....???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

153 Views
தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனராக அறியப்படும் இயக்குனர் சங்கர், தனது உதவி இயக்குனர்களாக உள்ளவர்களில் திறமையையும், தரமான திரைக்கதையையும் கொண்டவர்களை தனது தயாரிப்பின் மூலம் இயக்குனராக வெளிக்கொணரும் ஒருவர்.
இயக்குனர் வசந்தபாலனை "வெயில்" திரைப்படத்தின் மூலமும், சிம்புதேவன் "இம்சை அரசன் 23ம் புலிகேசி" படத்தினூடாகவும் தமது திறமையை வெளிக்காட்ட தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தவர் இயக்குனர் சங்கர். இவர் அண்மையில் தனது திரைத்துறை வாழ்க்கை பற்றிய பேட்டி ஒன்றில் பங்கேற்றிருந்தார்.

இந்தநிலையில், அண்மையில் வெளியான திரைப்படங்கள் மற்றும் அதன் இயக்குனர்கள் பற்றி சங்கர் குறிப்பிடுகையில், வெற்றிமாறன், அருண் பிரபு புருஷோத்தமன், லோகேஷ் கனகராஜ், H.வினோத் இயக்கத்தில் திரை கண்ட படங்கள் தனக்கு மிகப் பிடித்துப்போன படங்கள் என்று குறிப்பிட்டதுடன், "சில்லுக்கருப்பட்டி" என்ற திரைப்படத்தையும் அதனை இயக்கிய பெண் இயக்குனரான ஹலிதா ஷமீம் குறித்து புகழ்ந்துள்ளதோடு, தற்போது ஹலிதா இயக்கத்தில் படமாகிக்கொண்டிருக்கும் "மின்மினி" திரைப்படத்தின் வெளியீட்டிற்காக தான் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார் இயக்குனர் சங்கர்.

நீண்ட கால இடைவெளியெடுத்து படமாக்கப்படும் "மின்மினி" திரைப்படமானது, கதைக்கேற்ற வகையில் பாத்திரமேற்றிருக்கும் நடிக நடிகைகள் குழந்தை பருவ காட்சிகளையும், இளம் வயது காட்சிகளையும் அவர்களே நடித்திருப்பதால், அவர்கள் வளர்வதற்காக 5 ஆண்டுகள் காத்திருந்து இளம் வயது பாத்திரங்களுக்குரிய காட்சிகளை இயக்குனர் ஹலிதா ஷமீம் படமாக்கிக்கொண்டிருப்பதாக கோடம்பாக்கம் சொல்கின்றது.

இதன் காரணத்தினாலேயே, "மின்மினி" திரைப்படத்தின் வெளியீட்டிற்கான தனது அதீத எதிர்பார்ப்பு குறித்து கருத்து கூறியுள்ளார் இயக்குனர் சங்கர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top