Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
23
பலூன்களில் பிரசாரம் - காரணம் என்ன

sooriyan gossip - பலூன்களில் பிரசாரம் - காரணம் என்னSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

331 Views
துண்டு பிரசுரங்கள் அடங்கிய,3,000 பலுான்களை பறக்கவிடப் போவதாக வட கொரியா அறிவித்துஉள்ளது. இதனால்,கலக்கம் அடைந்துள்ள தென் கொரியா,'இதுபோன்ற விஷப் பரீட்சையில் ஈடுபடுவது,எல்லையில் பதற்றத்தை மேலும் அதிகரித்து விடும்.எனவே,அந்த திட்டத்தை கைவிட வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளது

கிழக்காசிய நாடுகளான தென் கொரியாவுக்கும்,வட கொரியா வுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது.தென் கொரிய அரசு,அமெரிக்காவின் பேச்சை கேட்டு,தங்களுக்கு எதிரான விஷம பிரசாரத்தில் ஈடுபடுவதாக,வட கொரியா குற்றம் சாட்டி வந்தது.தென் கொரிய எல்லைக்குள் இருந்து,வட கொரியா ஆட்சியாளர்களுக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் அடங்கிய பலுான்களை பறக்க விட்டதே,வட கொரியாவின் குற்றச்சாட்டுக்கு காரணமாக இருந்தது.

இதையடுத்து, கடும் அதிருப்தி அடைந்த வட கொரியா,இரு நாட்டு எல்லையில் பேச்சு நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த தகவல் தொடர்பு அலுவலகத்தை குண்டு வைத்து தகர்த்தது.இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், தென் கொரியாவுக்கு எதிரான வாசகங்களுடன்,ஒரு கோடிக்கும் அதிகமான துண்டு பிரசுரங்கள் அடங்கிய, 3,000 பலுான்களை அனுப்பப் போவதாக அறிவித்தது.இது குறித்து தென் கொரிய அரசின் செய்தி தொடர்பாளர் யோ ஷாங்கி கூறியதாவது:

துண்டு பிரசுரங்கள் அடங்கிய பலுான்களை எங்கள் நாட்டுக்குள் பறக்க விடும் விஷப் பரீட்சையில் ஈடுபடுவதை,வட கொரிய அரசு கைவிட வேண்டும்.ஏற்கனவே எல்லையில் பதற்றம் நிலவும் சூழலில்,வட கொரியாவின் இந்த நடவடிக்கை, நிலைமையை மேலும் மோசமாக்கி விடும்.இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் மோசமாகும் சூழல் ஏற்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையே,எல்லை பகுதியில் இரு நாடுகளும் ராணுவ வீரர்களையும்,போர் தளவாடங்களையும் குவித்துள்ளன.வட கொரிய எல்லைக்கு அருகில்,தென் கொரிய ராணுவத்தினர்,நேற்று போர் பயிற்சியிலும் ஈடுபட்டனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top