Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
24
மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்

Sooriyan Gossip - மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

749 Views
வட அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ.அந்நாட்டு நேரப்படி நேற்று காலை 10.29 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ஓக்சகா மாகாணத்தின் சாண்டா மரியா ஸபோடிட்லனின் தென்மேற்கே 6.8 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கம் கவுதமாலா,ஹோண்டுராஸ்,எல் சல்வடார்,மெக்சிகோ சிட்டி ஆகிய நகரங்களில் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவாகியுள்ளது.தற்போது வரை 5 பேர் பலியானதாக மெக்சிகோ தேசிய சிவில் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

அதேசமயம் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.ஓக்சகான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,போசுட்லா,புவர்டோ எஸ்காண்டிடோ,பினடேபா நேசினல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொது மருத்துவமனைகள் நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ளன.மூரத்தில் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையும் சேதமடைந்திருக்கிறது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.இதனால் கடலோர மக்கள் அச்சமடைந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.அடுத்த சில மணி நேரங்களில் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. இருப்பினும் அகாபுல்காவில் 2.2 அடி உயரமும்,சலினா க்ரூவில் 2.3 அடி உயரமும் கடல் அலைகள் எழும்பின. அதிகபட்சமாக 3.3 அடி உயரம் வரை அலைகள் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதுதொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் கூறுகையில்,ஓக்சகா மாகாணத்தில் லேசானது முதல் மிதமானது வரை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.உயிரிழப்புகள் 100க்கும் குறைவாக மட்டுமே ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு எனவும்,100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாகவே பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு இரண்டு வாரங்களில் 2 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.இதனால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து சாலைகள் பெயர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.அப்போது 7.1 மற்றும் 8.1 என ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top