Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
24
தற்கொலை எண்ணம் தோன்றினால் 'தல' அஜித்தை நினைத்து பாருங்கள் - வாசுகி பாஸ்கர்.

Sooriyan Gossip - தற்கொலை எண்ணம் தோன்றினால் 'தல' அஜித்தை நினைத்து பாருங்கள் - வாசுகி பாஸ்கர்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

158 Views
'பொலிவூட்' எனப்படும் ஹிந்தி திரையுலகம் மட்டுமல்லாது, மொழி கடந்த ரசிகர் மனங்களை உலுக்கிப்போட்ட நடிகர் சுஷாந்த் சிங்கின்  தற்கொலை மரணம் ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை. இந்த சம்பவம் பற்றிய கவலையான கருத்துக் பகிர்வுகளும், விமர்சனங்களும் சமூக வலைத்தள பக்கங்களினூடாக காணக்கிடைக்கின்றன.
எந்தவித திரையுலகப் பின்னணியையும் கொண்டிராமல் பொலிவூட் திரையுலகிற்குள் நுழைந்த நடிகர் சுஷாந்த் சிங், திரைத்துறைக்குள் மெல்ல மெல்ல தன்னை நிலைநிறுத்த ஆரம்பித்திருந்த நிலையில், அவரது வாழ்வு முடிவிற்கு வந்திருந்தது. இதற்கு காரணம், நடிகர் சுஷாந்த் சிங்கை ஹிந்தி திரையுலகினை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் திரைப் பிரபலங்கள் பலர் ஒதுக்கி, அவமானப்படுத்தினர் என்றும், அதனால் உண்டான மன விரக்தியே தற்கொலையை நோக்கி தூண்டியது என்றும் சொல்லப்படுகின்றது.

இந்தநிலையில், மீண்டும் இப்படியான ஒரு துன்பகரமான சம்பவம் நிகழ்ந்துவிட கூடாது என்ற கவலையில், மனதுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலான சமூக வலைத்தளப் பதிவுகளை சிலர் மேற்கொள்கின்றமையையும் காணக் கிடைக்கின்றது. அந்தவகையில், தமிழ்த் திரையுலகின் ஆடை வடிவமைப்புக் கலைஞரான வாசுகி பாஸ்கரும் தனது கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தனது பதிவில் அவர் குறிப்பிடுகையில், "தமிழ் சினிமாவிலும் ஒதுக்கப்படும் பல 'சுஷாந்த்'கள் உள்ளனர். சிலர் என்னிடம் கூறி வருத்தப்படுவார்கள். மற்றும் சிலர் அமைதியாக சிரித்து கொண்டே புறக்கணிப்பின் வலியை கடப்பார்கள். அவர்களுக்கு எல்லோருக்கும் ஒன்றை மட்டும் சொல்கிறேன்.
நடிகர் 'தல' அஜித் திரைத்துறைக்குள் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் பட்ட போராட்டங்களை அவ்வப்போது நினையுங்கள்" என அறிவுரை கூறியிருக்கின்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top