Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
25
நயன் நடிப்பில் திரை காணுமா 'அறம் - 2'......???

Sooriyan Gossip - நயன் நடிப்பில் திரை காணுமா 'அறம் - 2'......???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

155 Views
தென்னிந்தியத் திரையுலகில் தனக்கென ஒரு தனித்தடம் பதித்து 'லேடி சூப்பர்ஸ்டார்' ஆக இன்னும் ஜொலித்துக் கொண்டிருக்கின்ற நட்சத்திரம் நடிகை நயன்தாரா. 
முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டாலும், நாயகிக்கு முக்கியத்துவமிக்க திரைக்கதைகளில் நடிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க ஆரம்பித்ததுடன் ஒரு சில படங்களை, மறைமுகமாக தானே தயாரித்தார். அதில் 'சூப்பர்ஹிட்' படமாக வெளிவந்த "அறம்" திரைப்படமும் ஒன்று.

புதுமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளிவந்த "அறம்" திரைப்படம் ஒட்டுமொத்த படக்குழுவிற்கே நல்ல பெயரையும், புகழையும் பெற்றுக்கொடுத்த காரணத்தினால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார் இயக்குனர்.

இது இப்படியிருக்க, "அறம் - 2" படத்தில் நயன்தாரா நடிக்க விரும்பவில்லை என்று இயக்குனர் கோபி நயினாரிடம் தெரிவித்ததால், நடிகை கீர்த்தி சுரேஷை நடிக்கவைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கோடம்பாக்கம் பேசிக்கொண்டது. இப்படியான செய்திகள் அரசல் புரசலாக இயக்குனர் கோபி நயினார் காதுகளை சென்றடைந்த நிலையில், குறித்த வதந்தியை அவர் மறுத்துள்ளார்.

"அறம் - 2" படம் பற்றி வெளியாகும் செய்திகள் தொடர்பில் இயக்குனர் கோபி நயினார் குறிப்பிடுகையில், "கீர்த்தி சுரேஷிடம் நான் இந்தப் படம் தொடர்பில் கதைத்ததாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை. 'அறம்- 2' படத்தை திரைக்குக் கொண்டு வருவதானால், நயன்தாராவை தவிர வேறு எந்த ஒரு நடிகையையும் வைத்து நான் இயக்க மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top