Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
26
கருவாடு வியாபாரத்தில் பிரபல நடிகர் - படப்பிடிப்பு இல்லாமையால் இந்த நிலை.

Sooriyan Gossip - கருவாடு வியாபாரத்தில் பிரபல நடிகர் - படப்பிடிப்பு இல்லாமையால் இந்த நிலை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

100 Views
ஒட்டுமொத்த உலக நாடுகளையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் 'கொவிட் 19' எனப்படும் கொரோனா வைரஸ், பல லட்சக்கணக்கான உயிர்களை தொடர்ந்தும் காவு கொள்வதுடன், கடைக்கோடி மக்களின் வாழ்வாதாரத்திலும் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளது.
அன்றாட வருமானத்தில் வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் பல குடும்பங்கள், தமது அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாமலும், தமது மூன்றுவேளை உணவிற்கான வசதியற்ற நிலைக்கும் உள்ளாகியிருக்கின்றனர். இந்தநிலையில், திரைத்துறை சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் நடிகர்கள் கூட தமக்குத் தெரிந்த வேறு தொழில்களில் இறங்கியிருக்கின்றனர்.

வசதி வாய்ப்புக்கொண்ட பிரபல நடிகர்கள் தமது குடும்பத்தினருடன் வீட்டில் நேரத்தை செலவிட்டிருக்க, பொருளாதார நிலையில் பின்தங்கிய ஒரு சில நடிகர்களே தற்காலிகமாக வேறு தொழில்துறைக்கு தம்மை மாற்றிக்கொண்டுள்ளனர். அந்த வகையில், மராத்தி மொழியில் வெளியாகி, 'சூப்பர் ஹிட்' டான "பாபாசாகேப் அம்பேத்கர்" என்ற நெடுந்தொடரில் நடித்து பிரபலமான நடிகர் ரோஹன் பெட்னேக்கர் தற்போது கருவாடு வியாபாரத்தில் இறங்கியிருக்கின்றார்.

இது பற்றி அவர் கூறுகையில், "கொரோனா வைரஸ் தொற்று காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால், இப்போதைக்கு நடிப்பில் ஈடுபடும் வாய்ப்புகள் கிடைக்கப்போவதாக தெரியவில்லை. வேளை எதுவும் இல்லை என்று முடங்கிக் கிடக்காமல் இந்த வியாபாரத்தில் இறங்கிவிட்டேன். கருவாடு வியாபாரத்தையே எனது தந்தை தொழிலாக செய்தமையினால், எனக்கு இந்த தொழிலில் கொஞ்சம் அனுபவம் உள்ளது.

தெரிந்த தொழிலை செய்வதே முன்னேற சிறந்த வழி. இந்த வியாபாரத்தை செய்வதால் எனக்கு எந்த அவமானமும் இருப்பதாக தெரியவில்லை. படப்பிடிப்புக்கள் ஆரம்பமானதும் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்துவேன்" என்கிறார் இந்த யதார்த்தவாதி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top