Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
26
அறம் பாகம் 02 - நயனுக்குப் பதில் கீர்த்தி சுரேஷ்

sooriyan gossip - அறம் பாகம் 02 - நயனுக்குப் பதில் கீர்த்தி சுரேஷ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

217 Views
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து 2017-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அறம். ஆழ்துழை கிணற்றில் விழுந்த ஒரு குழந்தையை காப்பாற்ற போராடும் கலெக்டரையும் அரசியல்வாதிகளின் தவறுகளையும் சுற்றி கதை பின்னப்பட்டு இருந்தது.
நயன்தாரா கலெக்டராக நடித்திருந்தார். அவரது கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏற்கனவே வெற்றி பெற்ற பல படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. 

இதிலும் நயன்தாராவே நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்து இருப்பதால் கால்ஷீட் ஒதுக்குவதில் சிக்கல் உள்ளது.

எனவே, இந்நிலையில் நயன்தாராவுக்கு பதில் சமந்தாவை இணைக்க யோசித்தனர். தற்போது கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க திட்டமிட்டு அவரிடம் பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் சமீபத்தில் இணைய தளத்தில் வெளியானது. இதற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. ஆனாலும், காணாமல் போன குழந்தையை தேடும் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் நடித்து இருந்த கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.

ஏற்கனவே, மறைந்த நடிகை சாவித்திரியாக நடிகையர் திலகம் படத்திலும் நடித்து திறமையை நிரூபித்து இருந்தார். எனவே அறம் 2-ம் பாகத்துக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதனால், கீர்த்தி சுரேஷ் தான் அறத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top