Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
29
பாம்பு வந்துவிட்டது.மீட்பு குழுவிற்கு காத்திருந்த அதிர்ச்சி

sooriyan gossip - பாம்பு வந்துவிட்டது.மீட்பு குழுவிற்கு காத்திருந்த அதிர்ச்சிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,609 Views
கோயம்புத்தூரில் ஒரு வீட்டின் கழிவறையில் 35 பாம்புகள் மொத்தமாக குடும்பம் நடத்தி வந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.மீட்பு குழுவிற்கு அவசரமாக வந்த தொலைபேசி அழைப்பு.அங்கு சென்று பார்த்தால் அதிர்ச்சி.

கோயம்புத்தூரில் உள்ள கோவில்மேடு பகுதியில் இருந்து பாம்புகளை மீட்கும் மீட்பு குழு ஒன்றுக்கு அவசரமாக அழைப்பு வந்துள்ளது.எங்கள் வீட்டு கழிப்பறையில் பாம்பு ஒன்று இருக்கிறது.அந்த பாம்பு பெரிதாக உள்ளது என்று கூறியுள்ளனர் இதை அடித்து கொல்ல முடியாது என்று தோன்றுகிறது.உடனே வந்து அந்த பாம்புகளை மீட்டு செல்லுங்கள் என்று தகவல் கொடுத்துள்ளனர்.அங்கு வேகமாக மீட்பு குழு வந்தது.

அந்த வீட்டின் கழிப்பறையில் வீரியன் வகை பாம்பு ஒன்று இருந்துள்ளது.இந்த பாம்பு மிக பெரிதாக இருந்து உள்ளது.சரி ஒரு பாம்பு தானே அதை எளிதாக பிடித்து விடலாம் என்று முடிவு செய்துள்ளனர்.இதற்காக பாம்பு பிடிக்கும் மீட்பு குழுவை சேர்ந்த முரளி,ஒரு பையை எடுத்துக் கொண்டு,பாம்பை பிடிக்க அருகில் சென்று உள்ளார்.பிடிக்க அருகே சென்றவருக்கு பெரிய அதிர்ச்சி.அந்த ஒரு பாம்பு அங்கே பெரிய குடும்பத்தையே நடத்தி உள்ளது.

ஆம்,அந்த பாம்பு அங்கேயே குஞ்சு பொறித்து குட்டிகளை பெற்றுள்ளது.நிறைய குட்டிகளை பாம்புகள் அங்கு போட்டுள்ளது.அம்மா பாம்பு உட்பட மொத்தம் 36 பாம்புகள் அங்கே இருந்துள்ளது.இதை பார்த்து மீட்பு குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.35 பாம்புகள் வீரியன் வகை பாம்புகள் ஆகும்.எல்லாம் குட்டி குட்டி பாம்புகள்.இந்த பாம்புகள் சில நாட்களுக்கு முன்பு இங்கே குஞ்சு பொரிக்க வந்து இருக்கலாம்.

நீண்ட நாட்களாக அங்கே இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.இது அதிக விஷத்தன்மை கொண்ட வீரியமான பாம்பு ஆகும்.இதையடுத்து அந்த பாம்பை மீட்க பெரிய அளவில் பைகள் கொண்டு வரப்பட்டு காட்டுக்குள் விட்டனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top