Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
29
மீள் பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் வருகின்றன PPE KIT

Sooriyan Gossip - மீள் பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் வருகின்றன PPE KITSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

55 Views
கொரோனா தொற்றாளர்களை நேரடியாகக் கவனிக்கும் வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்படுத்தும் ஆடைகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றாலும் கொரோனா வைரஸ் தொற்று ஆபத்து அதிகமாகவே இருப்பதால், அவர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு ஆடைகள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருந்தது.
ஆனால், தற்போது அதற்கான தீர்வாக மீண்டும் கழுவி பயன்படுத்தக்கூடிய வகையிலான மருத்துவ பாதுகாப்பு ஆடைகளை தமிழ்நாட்டின் கோவையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்று உருவாக்கியுள்ளது. இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆடைகள் 80 முறை தோய்த்து பயன்படுத்தலாம் என்றும் அறிவித்திருக்கின்றது குறித்த நிறுவனம்.

தம்மால் மீள் பாவனைக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ள மருத்துவ பாதுகாப்பு ஆடைகள் பற்றி குறித்த தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் கூறுகையில், "சராசரியாக 80 முறைக்கு மேல் துவைத்தாலும் இந்த பாதுகாப்பு ஆடைகள் தயாரிக்கப்பட்டுள்ள துணியில் குளோரின் மீளேற்றம் ஆகும் வகையிலான திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

PPE KIT எனப்படும் இந்த மருத்துவ பாதுகாப்பு ஆடைகளை தயாரிப்பதற்காக எம்மால் பயன்படுத்தப்பட்டுள்ள துணியில், கொரோனா வைரஸை அழிக்கும் குளோரின் பண்புகள் காணப்படுகின்றன. இந்த கிருமிநாசினியின் தொற்று நீக்கும் தன்மையானது துணியின் மேற்பரப்பில் இரண்டு வாரங்கள் வரை காணப்படும். இப்படியாக, துணியில் காணப்படும் குளோரின் தன்மையானது இந்த விசேட ஆடைகளை துவைக்கும்போது அதன் மேற்பரப்பில் மீளேற்றம் பெறுகின்றது.

இந்த விஷேட பாதுகாப்பு ஆடைகளை முதல்முறை துவைக்கும்போது குளோரின் தன்மை எவ்வாறு காணப்படுமோ, அதேயளவு தன்மையும், பயனும் கிட்டத்தட்ட 80 முறை துவைத்த பிறகும் கிடைக்கிறது" என்கின்றார் குறித்த நிர்வாக இயக்குனர்.

இந்தியாவில் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே செல்லும் கொரோனா தொற்று காரணமாக, மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு ஆடைகளுக்கான தேவையும், செலவீனமும் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான பாதுகாப்பு ஆடைகளின் தயாரிப்பு வெற்றியானது பெரும் பயனுள்ள வகையில் அமைந்திருக்கின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top