உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸின் தாக்கம் சற்றும் ஓயவில்லை. இது இப்படி இருக்க மற்றுமொரு பக்கத்தில் பன்றிகளில் இருந்து ஒருவிதமான காய்ச்சல் பரவ தொடங்குகிறது.
சீனாவில் இன்னொரு விதமான காய்ச்சல் பரவி வருகிறது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி வருகிறது.
ஆனால், எந்த நேரத்திலும் இது மனிதர்களைத் தாக்கலாம் என்ற ஆபத்து இருந்து வருகிறது.
இந்த காய்ச்சல் உடனடியான பிரச்சனை இல்லை என்றாலும், பின் வரும் காலங்களில் எப்போது வேண்டுமானாலும் இது மனிதர்களிடையே பரவும் வாய்ப்புண்டு.
இக்காய்ச்சல் கொரோனா வைரஸ் தொற்று போல உலகப் பெருந்தொற்றாக மாறும் அச்சுறுத்தல் உள்ளது என ஆய்வாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.
இது புதுவிதமான வைரஸ் என்பதால் மனிதர்களுக்கு இதனை எதிர்கொள்ள நோயெதிர்ப்புத் திறன் இருக்காது.
இப்போது வரை இதனால் பேராபத்து ஏதும் இல்லை. ஆனால், இதனை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்கின்றனர்.