Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
06
ஊரடங்கு தளர்த்தப்பட்ட லண்டன் - எப்படி உள்ளது

sooriyan gossip - ஊரடங்கு தளர்த்தப்பட்ட லண்டன் - எப்படி உள்ளதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

420 Views
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றுக்கு பல நாடுகளும் சிக்கித்தவிக்கின்றன.இங்கிலாந்தில் இதுவரை 2.85 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, ஜூலை 4ம் திகதி முதல் விடுதிகள்,உணவகங்கள்,சினிமா தியட்டர்கள்,சலூன்கள்,பார்கள்,ஜிம்கள்,விளையாட்டு மைதானங்கள்,அருங்காட்சியகங்கள்,நூலகங்களை திறக்க பிரிட்டன் அரசு அனுமதி அளித்தது.ஆனாலும்,6 பேருக்கு மேல் கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டன.

தளர்வுகள் கொடுத்தாலும்,மக்கள் தங்கள் உடல்நலம்,பாதுகாப்பிற்காக கட்டுப்பாடுகளை பின்பற்றவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டதால்,மக்கள் கட்டுப்பாடுகள்,விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு,சமூக இடைவெளியின்றி கூட்டம் கூட்டமாக கூடியதால்,மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தளர்வுகள் அறிவிக்கப்பட்ட முதல் நாள் இரவில்,லண்டனில் புகழ்பெற்ற இடமான சோஹோவில் மக்கள் பெருமளவு கூடி,மாஸ்க் அணியாமல்,சமூக இடைவெளியின்றி மது அருந்தி நடனமாடியுள்ளனர்.

லண்டனில் உள்ள பல இடங்களில் மக்கள் பெருந்திரளாக கூடி மதுபான விடுதிகளில் அருகருகே அமர்ந்து மது அருந்தும் ஏராளமான புகைப்படங்கள்,வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இது குறித்து இங்கிலாந்தின் பொலீஸ் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் ஜான் ஆப்டர் கூறியதாவது:
மது அருந்தி வருபவர்களால் நிச்சயம் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது.அவர்கள் அவ்வாறு பின்பற்ற மாட்டார்கள் என்பதும் தெளிவாக தெரிகிறது. இரவு முழுவதும் பரபரப்பாக காணப்பட்டுள்ளது லண்டன்.

பொலீஸ் அதிகாரிகள் முடிந்தவரை சிறப்பாக சமாளித்தனர்.சில பகுதிகளில் பொலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்படத்தாக அவர் கூறினார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top