Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
07
நெப்போலியனை தலையில் வைத்து கொண்டாடும் 'தல' ரசிகர்கள்.

Sooriyan Gossip - நெப்போலியனை தலையில் வைத்து கொண்டாடும் 'தல' ரசிகர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

371 Views
திரையுலக செயற்பாடுகளை கொரோனா வைரஸ் தொற்று முடக்கிப்போட்டுள்ள நிலையில் நடிகர் நடிகைகள் தமது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருவதுடன் இணையத்தள பக்கங்களிற்கான பிரத்தியேக செவ்விகளையும் வழங்கிவருகின்றனர். இதன் மூலம் ரசிகர்களுடனான தமது தொடர்பையும் தொடர்ச்சியாக பேணிவருகின்றனர்.
இந்தவகையில் ஒரு சில நாட்களாக திரையுலகம் சார்ந்து எல்லோரது பேசுபொருளாகவும் மாறியிருப்பவர் நடிகர் நெப்போலியன். இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் 'புது நெல்லு புது நாத்து' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நெப்போலியன் தற்போது ஹொலிவூட் திரையுலகம் வரைக்கும் தனது தடம் பதித்து நடித்துக்கொண்டிருக்கின்றார்.

அண்மையில் 'தளபதி' விஜய் பற்றி கூறிய கருத்து ஒன்றினால் தளபதி ரசிகர்களின் மனக்கசப்பிற்கு உள்ளாகியுள்ள இவர், தற்போது 'தல' அஜித் தொடர்பில் சொன்ன விஷயம் ஊடாக 'தல' ரசிகர்கள் நெப்போலியனை தமது தலையில் வைத்துக் கொண்டாடுமளவிற்கு சென்றுள்ளனர்.

அண்மையில், பிரபல இணையத்தள ஊடகம் ஒன்றிற்கு இது தொடர்பில் அவர் கூறுகையில் 'தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலருடனும் இணைந்து பல படங்களில் நடித்து விட்டேன். இருந்தும் 'தல' அஜித்துடன் ஒரு படத்தில் கூட இதுவரை சேர்ந்து நடிக்கவில்லை. இனிவரும் காலங்களில் எப்போதாவது அஜித்துடன் இணைந்து நடிக்க வாய்ப்புக்கு கிடைத்தால் அது எந்த கதாபாத்திரம் என்றாலும் மறுக்காமல் நடிக்கும் ஆர்வத்துடன் உள்ளேன். ஆனால் 'தல' அஜித்திற்கு வில்லனாக மட்டும் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். இந்த விஷயமே 'தல' ரசிகர்கள் நடிகர் நெப்போலியனை கொண்டாடுமளவிற்கு சென்றுள்ளது என சொல்கின்றது கோடம்பாக்கம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top