Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
07
காற்று வழியாக கொரோனா வைரஸ் பரவலா?

Sooriyan Gossip - காற்று வழியாக கொரோனா வைரஸ் பரவலா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

452 Views
கொரோனா வைரஸ் பற்றி பல தகவல்களும் செய்திகளும் வந்துகொண்டிருக்கும் பட்சத்தில் தற்போது காற்று மூலமாககொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆதாரங்கள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்துக்கு 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் உலக சுகாதார நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

உலகத்தையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் இக் கொரோனா வைரஸானது மனிதனின் சுவாச பாதையில் பாதிப்பை உண்டாக்கி மரணத்தை விளைவிக்கின்றது.இதன் காரணமாக மீண்டும் மதுபான விடுதிகள், உணவு விடுதிகள், அலுவலகங்கள், சந்தைகள், கேளிக்கை விடுதிகளுக்கு செல்லும்போது மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாக நேரிடும் எனவும் கூறியுள்ளார்கள் விஞ்ஞானிகள் .

இதன் காரணமாக முகக்கவசம் அணிதல் உட்பட, சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தும்மல், இருமல், எச்சில் துளிகள், பொருட் தொடுகை மூலம் முகத்தில் தொடல் மூலம் பரவும் இவ்வைரஸ் தற்போது காற்று மூலம் பரவுவது பலரையும் ஆச்சரியத்துக்குள்ளும் அதிக பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த தகவலை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது.அத்துடன் குறிப்பாக கொரோனா வைரஸ் தொடர்பான நோய்த்தடுப்பு பரிந்துரைகளை திருத்தி வெளியிட வேண்டும் என அந்த கடிதத்தில் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.


அதிக காற்றோட்டம் கொண்ட நெரிசலான இடங்களில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த என்95 வகை முககவசம் தேவைப்படும் எனவும் , வீடுகளில் மிகச்சிறிய துகள்களில் மிதக்கும் நோய்க்கிருமிகளை கொல்வதற்கு புற ஊதா விளக்குகள் தேவைப்படலாம்’ என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.


எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுவதாக விஞ்ஞானிகள் கூறுவதை நம்பமுடியாது என உலக சுகாதார நிறுவனத்தின் நோய்த்தொற்று கட்டுப்பாட்டின் தொழில்நுட்பப்பிரிவு தலைவர் டாக்டர் பெனிடெட்டா அலிகிரான்சி கூறியுள்ளார்.அத்துடன் ‘கொரோனா தொற்று காற்று மூலம் பரவுகிறதா?பரவி விட்டதா ? என்பது தொடர்பான ஆய்வுகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. ஆனால் இதுவரை அதை உறுதிப்படுத்துவதற்கான வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top