Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
14
திருமணம் எப்போது...? - மனம் திறந்த ஆப்கான் வீரர் ரஷித் கான்

Sooriyan Gossip - திருமணம் எப்போது...? - மனம் திறந்த ஆப்கான் வீரர் ரஷித் கான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

103 Views
ஆப்கானிஸ்தான் அணியின் இளம் வீரரும், சிறந்த சுழற்பந்துவீச்சாளருமான ரஷித் கான் தனது திருமணம் குறித்து வெளியிட்ட அறிவிப்பு, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் தலைமைத்துவத்திலும் பங்கெடுத்திருக்கும் இந்த இளம் வீரர், எதிரணி வீரர்களை திணறடிக்கும் பந்துவீச்சு மற்றும் சிறப்பான துடுப்பாட்டம் காரணமாக கிரிக்கெட் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், அண்மையில் 'அஜாதி' என்ற ஆப்கானிஸ்தான் வானொலி ஒன்றிற்கு பேட்டி ஒன்றை வழங்கியிருந்தார்.

குறித்த பேட்டியின்போது, "உங்களது திருமணம் எப்போது...?" என ரஷீத் கானிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய அவர், 'ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பையை வென்ற பின்னர்தான் எனது திருமண நிச்சயதார்த்தம் மற்றும் திருணம் செய்து கொள்வேன்' என்று தெரிவித்திருந்தார்.

இது இப்படியிருக்க, இணையத்தில் அரட்டையடிக்கும் சிலர் ரஷீத் கானின் இந்தக் கருத்தையும் தமது கேலி பதிவுகளுக்குள் உள்ளடக்கத் தவறவில்லை. அவர்கள் இது பற்றி பதிவிடுகையில், " இதோ, புதிய சல்மான் கான். உலகக் கிண்ணத்தை வென்றபின் திருமணம் செய்வதென்றால் இவர் தனது திருமணத்திற்காக 2050ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். திருமணத்திலிருந்து தப்பித்துக்கொள்ள சிறந்தவொரு திட்டம் இது" என தமது கலாய்ப்புகளை ஒரு பக்கம் தெறிக்கவிடுகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top