Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
22
ரசிகர்களிடம் வெற்றிமாறன் கொடுத்த "டைரி" - சந்தோசத்தில் அருள்நிதி

Sooriyan Gossip - ரசிகர்களிடம் வெற்றிமாறன் கொடுத்த "டைரி" - சந்தோசத்தில் அருள்நிதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

146 Views
திரையுலக மற்றும் பெரும் அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து திரைத்துறைக்குள் நுழைந்து மிக அமைதியாக தனக்கே உரிய பாணியில் நடித்து, ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வருபவர் நடிகர் அருள்நிதி.
கலைஞர் கருணாநிதி குடும்பத்திலிருந்து திரைத்துறைக்குள் வந்த இவர் நடித்த படங்கள், ரசிகர்களிடம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்துள்ளதால் அடுத்தடுத்து பல படங்களில் தொடர்ச்சியாக நடித்துக்கொண்டிருக்கும் அருள்நிதி, தற்போது புதிய படமொன்றில் நடித்து முடித்திருந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த இந்த காலப்பகுதியில் குறித்த திரைப்படத்தின் வெளியீட்டிற்கான மேலதிக வேலைகள் நடைபெற்றிருந்தன.

அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் உருவாக்கும் இந்தப் படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவுப் பணியை கவனிக்க, யோகான் இசையமைப்பில் முழுமை பெற்றிருக்கின்றது அருள்நிதியின் புதிய திரைப்படம்.

படப்பிடிப்பு முடிந்து படம் முழுமைபெறும் வரைக்கும் தலைப்பு முடிவு செய்யப்படாமல் இருந்த நிலையில், நேற்றையதினம் நடிகர் அருள்நிதியின் பிறந்ததினத்தை முன்னிட்டு, இந்தப் புதிய படத்திற்கான தலைப்பு ரசிகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. "டைரி" என்ற இந்த தலைப்பை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டு வைத்து சிறப்பித்துள்ளார்.

"டைரி" என்ற இந்தப் படத்தின் திரைக்கதையானது உண்மைச் சம்பவம் ஒன்றினை மையக்கருவை வைத்து, இயக்குனரின் கற்பனையில் உதித்த சில கற்பனைகளையும் கலந்த ஒரு படமாக உருவாகியுள்ளதாகவும், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைவடைந்து, தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் "டைரி" திரை காணவுள்ளதாகவும் படக்குழு சொல்கின்றது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top