Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
29
#WHO எச்சரிக்கை #COVID19

sooriyan gossip - #WHO எச்சரிக்கை #COVID19Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,211 Views

கொரோனாவின் முதல் அலையில் நாம் உள்ளோம் வரும் காலத்தில் இதைவிட பெரிய அலைகள் வரலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,69,02,832- ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,63,592 - ஆகவும் அதிகரித்துள்ளது.அதேபோல் வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1,04,64,366 - ஆக அதிகரித்துள்ளது.அனைத்து நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.



இந்நிலையில் கொரோனாவின் முதல் அலையில்தான் தற்போது நாம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மார்க்ரெட் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கு முந்தைய காலங்களில் வெடித்த சுவாசம் தொடர்பான வைரஸ்கள் குறிப்பிட்ட பருவங்களில் மட்டுமே பரவின. இப்படியிருக்கையில் கொரோனா மிக வித்தியாசமாக நடந்துக்கொள்கிறது.இனிமேல்தான் நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். நாம் வைரஸைப் பற்றி கற்றுக்கொண்டிருந்தால் அது நம்மைப் பற்றி அறிந்துகொள்கிறது.

வைரஸின் இரண்டாவது அலைத் தொடர்பான கேள்விக்கு, “நாம் தற்போது முதல் அலையில் இருக்கிறோம்.இரண்டாவது அலை மிகவும் பெரியதாக இருக்கப்போகிறது.அது தொடர்ந்து அதிகமாகி பின்னர் குறையும். இதில் மிகவும் சிறந்த விஷயம் என்னவென்றால் மக்கள் நினைத்தால் வைரஸ் பரவலைக் குறைக்கலாம்.ஒரே நேரத்தில் முதல்,இரண்டாவது,மூன்றாவது அலை உருவாகும் என்ற விஷயங்களில் அர்த்தம் இல்லை.வருங்காலத்தில் பெரிய வெடிப்பு உள்ளது

கூட்டம் கூடுவதைத் தவிர்த்தால் மட்டுமே கொரோனாவை முழுமையாக அழிக்க முடியும்.மேலும்,கைகழுவுதல்,சுற்றுப்புற தூய்மை, முகமூடி அணிவது,இருமலின்போது வாயை மூடிக்கொள்வது ஆகியவற்றை தவறாமல் செய்ய வேண்டும்.உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் வீட்டிலேயே உங்களை தனிமைப்படுத்திகொள்ளுங்கள்.நீங்கள் யாரிடம் தொடர்பில் இருந்தீர்கள் என அறிந்து அவர்களையும் தனிமையில் இருக்க வைப்பது சிறந்தது” என்று அவர் பேசியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top