Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
30
ராஜமௌலியையும் தொற்றிக்கொண்ட கொரோனா - குடும்பத்தினரும் பாதிப்பு.

Sooriyan Gossip - ராஜமௌலியையும் தொற்றிக்கொண்ட கொரோனா - குடும்பத்தினரும் பாதிப்பு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

36 Views
"பாஹுபலி" திரைப்படத்தின் மூலம் இந்தியாவைத் தாண்டி உலக அளவில் அறியப்பட்ட இயக்குனராக இருக்கும் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர் ராஜமௌலி கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா எனும் கொடிய நோயினால் உலக அளவில் தொற்று அதிகரித்த நாடுகளில் 3வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்தநிலையில், சாதாரண மக்கள் தொடக்கம் பிரமுகர்கள் வரை கொவிட்-19 தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்தநிலையில், பொலிவூட் திரையுலக பிரபலமான அமிதாப் பச்சன் குடும்பத்தினர் அண்மையில் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகிய நிலையில், தற்போது இயக்குனர் ராஜமௌலியுடன் சேர்த்து அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தாக்கியுள்ளதாக ராஜமௌலியே தனது டுவிட்டர் சமூக வலைத்தளப் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

அதில், "சில தினங்களுக்கு முன்பு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அது தானாகவே சரியாகிவிட்டாலும், நாங்கள் பரிசோதனை செய்து கொண்டோம். இன்று பரிசோதனை முடிவில் மிதமான கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் அறிவுரைப்படி நாங்கள் எங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். எந்த அறிகுறியும் இல்லாமல் நாங்கள் நன்றாக உள்ளோம். ஆனால், அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம். உடலில் நோயெதிர்ப்பு சக்தி உருவானதும் பிளாஸ்மா தானம் செய்யவும் தயாராகியுள்ளோம்" என்று குறிப்பிட்டிருக்கின்றார் ராஜமௌலி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top