பாகுபலி படத்தின் மூலம் உலகளாவிய ரீதியில் புகழ் பெற்றவர் இயக்குனர் ராஜமவுலி தற்போது ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா நடிப்பில் 'ஆர்ஆர்ஆர்' படத்தை இயக்கி வருகிறார். அதாவது, இரத்தம் ரணம் ரெளத்திரம். பாகுபலிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படம் . இதில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கின்றனர்.
ராஜமவுலியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 'எனக்கும் என் குடும்பத்தினருக்கும் சில நாட்களுக்கு முன் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. நாங்கள் பரிசோதனை செய்து கொண்டோம்.அதில் லேசான கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்களின் அறிவுரைப்படி எங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். எந்த அறிகுறியும் இல்லாமல் நாங்கள் நன்றாக உள்ளோம். ஆனால், அனைத்து சுகாதார வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம்.