நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். போனிகபூர் தயாரிக்கிறார்.
வலிமை படத்தை ஹிந்தியிலும் டப்பிங் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஹிந்தியில் வலிமை படத்தை ரிலீஸ் செய்ய போனிகபூர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டால், அஜித் படங்களில் ஒரேநேரத்தில் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் முதல் படம் இதுவாகும்.