Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
31
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தள்ளிபோகுமா? காரணம் தேடும் ட்ரம்ப்

sooriyan gossip - அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தள்ளிபோகுமா? காரணம் தேடும் ட்ரம்ப்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

187 Views
இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்கவேண்டிய அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை கொரோனோ வைரஸ் தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் காரணம் காட்டி தள்ளிவைக்கலாம் என்று யோசனை கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

கொரோனா வைரஸ் தொற்றினால், அதிக அளவில் தபால் வாக்குகள் பதிவானால், அதில் முறைகேடும் துல்லியமற்ற முடிவுகளும் வெளியாகும் என்று அவர் கூறியுள்ளார். எனவே, மக்கள் முறையாக, பாதுகாப்பாக வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகும் வரை தேர்தலைத் தள்ளிவைக்கலாம் என்று அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

தபால் வாக்குப் பதிவில் முறைகேடு நடக்கும் என்ற டிரம்பின் கூற்று சரியென்று சொல்வதற்கு போதிய ஆதாரம் இல்லை என்றாலும் தபால் வாக்குகளுக்கு எதிராக நீண்டகாலமாக கருத்து சொல்லி வருகிறார் டிரம்ப். அதில் முறைகேடு நடக்க வாய்ப்பு அதிகம் என்பது அவரது கருத்து.

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பொது சுகாதார விடயங்களை கருத்தில் கொண்டு பல அமெரிக்க மாகாணங்கள் தபால் வாக்குப் பதிவு முறையை எளிதாக்கவேண்டும் என்று கூறுகின்றன. அதே நேரம், அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின்படி தேர்தலைத் தள்ளிவைக்கும் உரிமை அதிபருக்கு இல்லை. அதேவேளை டுவீட்டரில் அடுத்தடுத்து டொனால்டு டிரம்ப் வெளியிட்ட பதிவுகளில் "எல்லோரும் தபால் மூலம் வாக்களிக்கும் நிலை ஏற்பட்டால், நவம்பரில் நடக்கவுள்ள தேர்தல் துல்லியமற்றதாகவும், வரலாற்றிலேயே அதிக மோசடியான தேர்தலாகவும் இருக்கும்'' என்றும் "அமெரிக்காவுக்கு மிகப்பெரிய சங்கடத்தைத் தரும்" என்றும் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top