Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
04
tik tok ஐ எங்களிடம் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ட்ரம்ப் அதிரடி முடிவு

sooriyan gossip - tik tok ஐ எங்களிடம் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ட்ரம்ப் அதிரடி முடிவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,462 Views
கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவும் சீனாவும்  ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டி வந்தனர். இந்த மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக சீனா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது.

மேலும், அமெரிக்காவின் உள்ள சீன தூதரகம் உளவு வேலையில் ஈடுபடுவதாக கூறி தூதரகத்தை உடனடியாக மூட உத்தரவிட்டது. தூதரகம் மூடப்பட்ட சில நாட்களில் பதிலடி நடவடிக்கையாக வுகான் நகரில் அமெரிக்க தூதரகத்தை சீனா மூடியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை போன்றே சீனாவின் டிக்டொக் செயலியை தங்கள் நாட்டிலும் தடை விதிக்க அமெரிக்கா தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது..
அமெரிக்காவில் 80 மில்லியன் பயனாளர்களை கொண்ட டிக்டொக் செயலிக்கு தடை விதிக்கப்படும் அதேசமயம் டிக்டொக்கின் தாய்நிறுவனமான சீனாவின் 'பைட்டான்ஸ்' நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

இதனால் டிரம்ப் தடை விதிக்கும் முன்னரே டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாட்டு உரிமத்தை விற்பனை செய்யும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. டிக்டொக் செயலியின் அமெரிக்க உரிமம் விற்பனைக்கு வருவதால் அதை வாங்க அமெரிக்காவின் மைக்ரோசொப்ட் நிறுவனம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், டிக் டொக்கின் உரிமத்தை அமெரிக்க நிறுவனம் வாங்கினால் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் ஒருவேளை
டிக்டொக் செயலி தங்கள் நாட்டு நிறுவனத்திற்கு விற்கப்படவில்லை என்றால் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் அந்த செயலி அமெரிக்காவில் செயல்பட தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
டிக் டொக் செயலியை வாங்குவது தொடர்பாக மைக்ரோசொப்ட் தலைவருடன் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். இந்த செயலியை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பாதுகாப்பு காரணங்களுக்காக மிகவும் ஆபத்தான ஒன்று. இதை அமெரிக்க நிறுவனம் வாங்குவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. டிக் டொக்கின் 30 சதவிகித பங்குகளை மட்டும் வாங்குவதை விட அந்நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளையும் வாங்குவது சுலபமான ஒன்றுதான். அமெரிக்க நிறுவனங்கள் யாரும் டிக்டொக் செயலியை வாங்கவில்லை என்றால் செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் அந்த செயலி அமெரிக்காவில் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.

ஒருவேளை விற்பனை நடைபெறும் பட்சத்தில் அந்த விற்பனை ஒப்பந்தத்திற்கு உதவும் வகையில் டிக்டொக்கை வாங்கும் அமெரிக்க நிறுவனத்திற்கு குறிப்பிட்டத் தொகை அரசின் பங்காக வழங்கப்படும். என தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top