Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
05
தனுஷிற்கு கொக்கி போடும் நடிகை - சிக்குவாரா சுள்ளான்...?

Sooriyan Gossip - தனுஷிற்கு கொக்கி போடும் நடிகை - சிக்குவாரா சுள்ளான்...?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

203 Views
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் " ஜகமே தந்திரம்" திரைப்படமானது, திரையிடலுக்கான அனைத்து பணிகளும் நிறைவுபெற்று ஆயத்தநிலையில்  இருந்தாலும் தீவிர கொரோனா வைரஸ் தொற்று ஆபத்து காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதன் காரணமாக இன்னமும் வெளியாகவில்லை.  
இந்தப் படத்திற்கான இசைப்பணியை சந்தோஷ் நாராயணன் கவனித்திருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி வரவேற்பைப்பெற்ற 'ரகிட்ட.. ரகிட்ட...' பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

இதேவேளை, "ஜகமே தந்திரம்" திரைப்படம் தொடர்பில், தனுஷ் ரசிகர்களுடன் அவ்வப்போது புதிய சுவாரஸ்யமான விஷயங்களை படக்குழுவினர் பகிர்ந்துவரும் நிலையில், இந்தப் படத்தில் மிக முக்கிய வேடமேற்றிருக்கும் நடிகை சஞ்சனா நடராஜனும் இந்தப் படத்தில் தான் நடித்த அனுபவம் பற்றி தனது ரசிகர்களுக்கு கூறியிருக்கின்றார்.

அண்மையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை சஞ்சனா நடராஜன் குறிப்பிடுகையில், “தனுஷ் போன்ற மிகப் பெரிய நடிகருடன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் போது எனக்கு பதற்றமாக இருந்தது. ஆனால் அவர் எனது பதற்றத்தை போக்கி நம்பிக்கை அளித்தார். தனுஷின் முதல் நாள் படப்பிடிப்பு முழுவதையும் உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்தேன். முதல் டேக்காக இருந்தாலும் சரி மூன்றாவது டேக்காக இருந்தாலும் சரி அவருடைய எனர்ஜி கொஞ்சம் கூட குறையாமல் இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

தனுஷ் "எந்திரன்" படத்தில் வரும் ‘சிட்டி ரோபோ’ போன்றவர். எந்த ஒரு கதாபாத்திரத்தையும் உடனடியாக உள்வாங்கிக்கொண்டு நடிப்பதில் அவர் வல்லவர். அவருடன் நடித்ததில் மிகுந்த சந்தோஷம். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்களுக்கு நன்றி” என தெரிவித்திருக்கின்றார் சஞ்சனா.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top