Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
10
'அருவா'வை கிடப்பில் போட்ட சூர்யா - கடுப்பில் ஞானவேல்ராஜா

Sooriyan Gossip - 'அருவா'வை கிடப்பில் போட்ட சூர்யா - கடுப்பில் ஞானவேல்ராஜாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

146 Views
இயக்குனர் ஹரி - சூர்யா கூட்டணியில் அமைந்த "சிங்கம்" திரைப்படத்தின் சூப்பர்ஹிட் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்து வந்த "சிங்கம் 2,- 3," படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில், "அருவா" என்ற திரைப்படத்தின் மூலம் இந்தக் கூட்டணி மீண்டும் இணைவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
'Studio Green' தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா "அருவா" என்ற இந்தப் படத்தை தயாரிப்பதாக அண்மையில் கோடம்பாக்கத்திலிருந்து செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இந்தப் படம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே வரவேற்பும் விமர்சனங்களும் கலவையாக வெளியாகின.

"அருவா" திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடர்ச்சியாக நடத்தி முடித்து, எதிர்வரும் தீபாவளிக்கு திரையிடும் முடிவோடு இருந்த தயாரிப்புத் தரப்பு அதற்கான முதற்கட்ட வேலைகளிலும் இறங்கியதாக தெரிய வந்தது. ஆனாலும், உலகத்தையே அலறவைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று இந்தியாவை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் காரணத்தினால், எதிர்பார்த்தபடி படப்பிடிப்பை நடத்த முடியவில்லை.

இது இப்படியிருக்க, கொரோனா அச்சுறுத்தல் ஓரளவுக்கு தணிந்ததும், இயக்குனர் வெற்றிமாறனின் கதையில் உருவாகும் படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் கசிகின்றன. அத்துடன், இயக்குனர் பாண்டிராஜ்ஜின் புதிய படமொன்றிலும் அவர் நடிக்கவிருப்பதாகவும் திரையுலக தகவல்கள் கூறுகின்றன.

குறித்த இரண்டு படங்களிலும் நடிகர் சூர்யா அடுத்தடுத்து நடிக்கவிருப்பதாக தெரியவந்த நிலையில், தமது தயாரிப்பில் உருவாகவிருந்த "அருவா" படத்தை கைவிடுவதாக 'Studio Green' ஞானவேல்ராஜா தீமானித்திருப்பதாக இணையத்தள, சமூக வலைத்தள பக்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனாலும், "அருவா" படக்குழுவிடமிருந்து எந்தவித உத்தியோகபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top