Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
11
வீடு திரும்பிய நடிகர் சஞ்சய் தத் - மகிழ்ச்சியில் 'பொலிவூட்'

Sooriyan Gossip - வீடு திரும்பிய நடிகர் சஞ்சய் தத் - மகிழ்ச்சியில் 'பொலிவூட்'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

113 Views
பொலிவூட் எனப்படும் ஹிந்தித் திரையுலகின் பிரபல நடிகரும், மும்பை குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்றில் தொடர்புபட்டதாக தெரிவித்து நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய சிறைத் தண்டனை பெற்று மீண்டவருமான சர்ச்சைக்குரிய நடிகர் சஞ்சய் தத், கொரோனா தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்ததாக சந்தேகத்தில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார்.
கடந்த 8ம் திகதி திடீரென மூச்சுத் திணறலுக்கு உள்ளான நடிகர் சஞ்சய் தத், அவசர அவசரமாக மும்பையில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையான லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு விசேட மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பிலும் அவருக்கு மிக முக்கிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தநிலையில், கொரோனா பரிசோதனைகளின் முடிவு சஞ்சய் தத்திற்கு கொரோனா நோய்த்தொற்று இல்லை என காட்டியதால் கொரோனா தொற்றுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவில்லை. இருந்தும் 2 நாட்கள் வைத்தியர்களின் நேரடி கண்காணிப்பில் மருத்துவமனையில் இருந்த நடிகர் சஞ்சய் தத். தற்போது வீடு திரும்பியுள்ளதாக பொலிவூட் தகவல்கள் கூறுகின்றன.

நடிகர் சஞ்சய் தத் முற்றுமுழுதாக உடல்நலம் சீரான நிலையிலேயே மருத்துவமனையிலிருந்து திரும்பியிருப்பதாகவும், அவர் உடல் ஆரோக்கியம் பூரணமாக வழமைக்கு திரும்பியிருப்பதாகவும் வட மாநில செய்திகள் மூலம் அறிய முடிகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top