Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
13
மன அழுத்தம் போக்கும் ரோபோ சங்கர் - மகிழ்ச்சியில் கொரோனா தொற்றாளர்கள்.

Sooriyan Gossip - மன அழுத்தம் போக்கும் ரோபோ சங்கர் - மகிழ்ச்சியில் கொரோனா தொற்றாளர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

143 Views
இந்திய துணைக் கண்டத்தையே தனது கட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா வைரஸ் தனது வீரியத்தை வெகுவாக பரப்பிவரும் காரணத்தினால், உலகில் COVID-19
தொற்றுப் பரவலில் முன்னிலை பெற்ற நாடுகள் வரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ளது இந்தியா.

இந்த நிலையில், இந்திய மத்திய அரசினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில், தொற்றுக்குள்ளான மக்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் வைரஸ் பாதிப்புக்கு உள்ளான ஒவ்வொரு மாவட்ட மக்களும் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள்ளேயே உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அதீத மன அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டு செய்திகள் கூறுகின்றன.

இதன் காரணமாக, தஞ்சாவூர் மாவட்டத்தின் கலெக்டர் அனுமதி வழங்கியதன் அடிப்படையில் பட்டுக்கோட்டை பகுதியிலுள்ள தனிமைப்படுத்தல் மையத்திலுள்ள கொரோனா தொற்றாளர்களுக்கு, மன அழுத்தத்தை குறைப்பதற்கான ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியொன்று நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்வில், நகைச்சுவை நடிகர் 'ரோபோ' சங்கர், திண்டுக்கல் சங்கர் மற்றும் சிலர் பங்கேற்றதுடன், ‘மிமிக்ரி’ எனப்படும் பலகுரல் நகைச்சுவை செய்து தொற்றுக்குள்ளானவர்களின் மனங்களை மகிழ்வித்து, அவர்களின் தனிமை உணர்வினைப் போக்கும் முயற்சியை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த நிகழ்ச்சி நிறைவடைந்ததும் ஊடகத்துறையினர் நடிகர் 'ரோபோ' சங்கரிடம், இது பற்றி கேட்டபோது, "கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டுமே தவிர ஒதுக்கக்கூடாது. அவர்களுடன் அன்போடு பேசி தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். எனது சொந்த செலவில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துப் பேசி மகிழ்ச்சிபடுத்தி, அவர்களது தனிமையுணர்வையும் மன அழுத்தத்தையும் குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றேன்.

இந்த நல்ல விடையத்தை முன்னெடுத்து முதலாவது நிகழ்ச்சியை சிறப்பாக நிறைவுசெய்துள்ளேன். இது ஆரம்பம் தான், இன்னும் பல நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள தனிலைப்படுத்தல் நிலையங்களில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளேன்" என்கிறார் பெயரில் 'ரோபோ'வையும் மனதில் மனிதத்தையும் கொண்ட நடிகர் ரோபோ சங்கர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top