Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
18
மழைக் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகள்

Sooriyan Gossip - மழைக் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

134 Views
கன மழை, அதனால் அதிகரிக்கும் ஈரப்பதம் மற்றும் நீர் தேங்குவதன் காரணமாக பல்வேறு சரும தொற்றுகக்ளுக்கு ஆளாகக்கூடும். 

கன மழை, அதனால் அதிகரிக்கும் ஈரப்பதம் மற்றும் நீர் தேங்குவதன் காரணமாக பல்வேறு சரும தொற்றுகளுக்கு ஆளாகக்கூடும். பொதுவாக கைகள், முதுகின் மேல் பகுதி, உச்சந்தலை, தொடைப்பகுதிகளில் வலி மற்றும் வீக்கம், சிறு கொப்பளங்கள் ஏற்படலாம். மழைக் காலங்களில் ஏற்படும் சரும பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

முகப்பரு: முகப்பரு, சொறி போன்றவை பெரும்பாலானோர் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சினையாகும். சருமத்தின் வகையை பொறுத்து அவற்றின் வீரியம் அமைந்திருக்கும். சருமத்தில் அதிகப்படியாக எண்ணெய் சுரப்பு இருந்தால் பருக்கள் உண்டாகும்.

வியர்வை: மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் வியர்வை குறைவாக வெளிப்படும். அதனால் சாப்பிடும் உணவும் சருமத்திலும், உடலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே எண்ணெய்யில் பொறித்த, வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சரும அழற்சி: மழைக்காலத்தில் சருமம் தொடர்பான நோய்கள் அதிகம் ஏற்படும். சருமத்தில் அரிப்பு, அழற்சி, சிவத்தல், தடிப்புகள் போன்ற தொற்றுக்கள் தோன் றும். சருமத்தில் எரிச்சலும் உண்டாகும். ‘சென்சிடிட்டிவ் ஸ்கின்’ கொண்டவர்களுக்கு இந்தவகை தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வறண்ட சருமம்: பொதுவாக வறண்ட சருமம் கொண்டவர்கள் சருமத்தில் சிவப்பு நிற தடிப்புகள் தோன்றுதல், சரும செல்கள் உதிர்தல், அரிப்பு ஏற்படுதல் போன்ற பிரச்சினையை எதிர்கொள்வார்கள். இந்த சிக்கல்களை தவிர்ப்பதற்கு நல்ல மாய்ஸ்சரைசரை பயன்படுத்த வேண்டும். ரசாயனங்களை கொண்ட லோஷன்கள் பாதிப்பை அதிகப்படுத்தும் என்பதால் சரும பராமரிப்பு பொருட்கள் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top