Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
18
டோனியின் முடிவால் கலங்கித் தவிக்கும் பயிற்சியாளர்

Sooriyan Gossip - டோனியின் முடிவால் கலங்கித் தவிக்கும் பயிற்சியாளர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

192 Views
அண்மைய சில நாட்களாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறியிருப்பவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரங்களான டோனி மற்றும் ரெய்னா ஆகியோர். 
நாடு, மொழி கடந்து கிரிக்கெட்டை நேசிக்கும் பொதுவான ரசிகர்கள் அனைவராலும் பெரிதும் நேசிக்கப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராகவும், தலைசிறந்த வீரராகவும் விளங்கிய மஹேந்திரசிங் டோனி. அண்மையில் இவரது ஓய்வு அறிவிப்பு வெளியானதிலிருந்து பலரும் தமது கருத்துக்களை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர்.

இந்தநிலையில், டோனியின் இளவயது பயிற்றுவிப்பாளராக இருந்த கேசவ் ரஞ்சன் பானர்ஜியும் மஹேந்திரசிங் டோனியின் தீர்மானம் குறித்த தனது கருத்தை பொதுவெளியில் முன்வைத்துள்ளார். அதில் ‘‘மீடியாக்களில் 2019 உலக கோப்பைக்குப் பிறகு ஒரு போட்டியில் கூட டோனி விளையாடவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி அவர் சர்வதேச போட்டிக்கு மீண்டும் திரும்ப முடியும் என ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன.

இதுதான் ஓய்வு குறித்து முடிவு எடுக்க முக்கிய காரணமாக இருந்திருக்குமா? என்பது எனக்குத் தெரியாது, ஆனால், இந்த முடிவில் அதுவும் ஒரு காரணியாக இருந்திருக்கலாம். டோனியால் மட்டுமே அதுகுறித்து கூற முடியும்.

ஆனாலும் , டோனி இன்னும் ஒரு வருடம் அணிக்காக போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெற இருந்த 20 - 20 உலகக் கிண்ண போட்டித் தொடரில் பங்கேற்றிருக்க வேண்டும்.காரணம், அவரது உடற்தகுதியை பொறுத்தமட்டில் மிக எளிதாகவும், சிறப்பாகவும் விளையாடலாம். இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, ஏராளமானோர் இதைத்தான் நினைத்தார்கள்.

எல்லாம் முடிந்து விட்டது. அவரது இந்த ஓய்வு அறிவிப்பானது எல்லோருக்கும் ஒரு பேரிடியாக உள்ளது. ஆனாலும், அடக்கமுடியாத கவலை உணர்வை கட்டுப்படுத்திக் கொள்ளத்தானே வேண்டும்’’ என்று மிக உருக்கமாக தெரிவித்துள்ளார் டோனி என்றும் அற்புதத்தை ஆரம்பத்தில் செதுக்கிய சிற்பி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top