Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
உக்கிரமடையும் மீரா மிதுன் சர்ச்சை - உருவப்பொம்மை எரிப்பு.

Sooriyan Gossip - உக்கிரமடையும் மீரா மிதுன் சர்ச்சை - உருவப்பொம்மை எரிப்பு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

234 Views
சமூக வலைத்தளங்களில் அண்மைய நாட்களாக அதிகம் விமர்சிக்கப்படுகின்ற நடிகை மீரா மிதுன். 'பிக்பொஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானாலும் தனது சில்லறைத்தனமான வேலைகளால் பெரிதும் பேசப்படும் ஒருவராக தற்போது மாறியுள்ளார் இவர்.
திரைப் பிரபலங்கள் பலரையும் சமூக வலைத்தளங்களில் வீண் வம்புக்கு இழுத்த இவர், அண்மையில் நடிகர் சூர்யா மற்றும் 'தளபதி' விஜய் ஆகியோரை சீண்டப்போனதன் காரணமாக, திரைத்துறை ரசிகர்களால் கண்டபடி கேவலமாக திட்டு வாங்கும் நிலைக்கு உள்ளானார் மீரா மிதுன்.

இருந்தும், எதற்கும் அசராமல் மீண்டும் மீண்டும் சூர்யா மற்றும் விஜய் குடும்பத்தினரையும் சேர்த்து தனது வில்லங்கத்தனமான எதிர் கருத்துக்களை பதிவிட்டுவரும் மீரா மிதுன், சில நாட்களுக்கு முன்னர் காணொளி காட்சி மூலமாகவும் கீழ்த்தரமான கருத்துக்களை பொதுவெளியில் பகிர்ந்திருந்த நிலையில் அந்தக் காணொளிப்பதிவு மீரா மிதுனுக்கு எதிரான வழக்குப் பதிவுக்கு தகுந்த ஆதாரமாக மாறி சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த காணொளிப்பதிவை முன்வைத்து கலாம் சேவை மையம் அமைப்பினால் புதுச்சேரி காவல்துறை நிலையத்தில் மீரா மிதுனுக்கு எதிராக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாத நடிகை மீரா மிதுன், அந்த முறைப்பாட்டை பற்றியும் கேலி செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் கடுப்பான கலாம் சேவை மைய உறுப்பினர்கள் மீரா மிதுனின் உருவப்பொம்மை ஒன்றை எரித்து, தமது கடும் கண்டனத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில், கலாம் சேவை மையத்தினரின் இந்த செயற்பாட்டிற்கு நடிகை மீரா மிதுனின் எதிர் நடவடிக்கை எப்படி அமையப்போகின்றது என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர், இணைய அரட்டையில் மூழ்கிக் கிடப்பவர்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top