Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
21
டோனிக்கு உருக்கமாக வாழ்த்து மடல் வரைந்தார் மோடி.

Sooriyan Gossip - டோனிக்கு உருக்கமாக வாழ்த்து மடல் வரைந்தார் மோடி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

136 Views
'கப்டன் கூல்' என்ற வார்த்தையை கேட்டதும், விளையாட்டு அரங்கத்தையே அதிர விடவும் மொழி கடந்து நேசிக்கவும் கோடி ரசிகர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மஹேந்திரசிங் டோனியின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகும் முடிவு பலரையும் சோகத்திற்குள் தள்ளிய நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தனது கவலையை தெரிவித்துள்ளார். 
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எம்.எஸ்.டோனிக்கு வாழ்த்து தெரிவித்து எழுதிய கடிதத்தில், இந்திய அணியிலிருந்து விலகும் டோனியின் முடிவு குறித்து தனது மன உணர்வை எழுதுகையில், "இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான டோனி புதிய இந்தியாவின் அடையாளங்களில் ஒருவர். அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகின்ற முடிவை அறிந்து ஏமாற்றம் அடைந்தேன்.

இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் வெற்றிகரமான அணித்தலைவர்களில் மகேந்திரசிங் டோனியும் ஒருவர். உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர், அணித்தலைவர், விக்கெட் காப்பாளர் என பல வகைகளில் வரலாறு டோனியை பெருமைப்படுத்தும்.

மஹேந்திரசிங் டோனி 2011 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் 'சிக்சர்' அடித்து போட்டியை வென்று உலகக்கிண்ணத்தை இந்தியாவிற்குப் பெற்றுக் கொடுத்ததை மறக்கவே முடியாது. வெறும் கிரிக்கெட் வீரராக மட்டுமே டோனியை சுருக்கிவிட முடியாது. அவர், பல கோடி இளைஞர்களுக்கான உத்வேகம். இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி கிரிக்கெட்டில் புதிய சகாப்தம் படைத்தவர் டோனி.

உலகக்கிண்ண வெற்றியின் பின்னர் இந்திய அணியின் ஏனைய வீரர்கள் அனைவரும் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்தபோது, டோனி மட்டும் தனது குழந்தையுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்த புகைப்படம் பார்த்தேன். அந்தப் படம் தான் எனது மனம் கவர்ந்ததாக அமைந்தது" என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றார் நரேந்திர மோடி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top