Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவின் அறிக்கை - மகிழ்ச்சியில் சூர்யா

Sooriyan Gossip - 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவின் அறிக்கை - மகிழ்ச்சியில் சூர்யாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

371 Views
"சூரரைப் போற்று" திரைப்படத்தை இணையத்தின் ஓடிடி வழியாக வெளியிடுவதன் மூலம், அந்தப் படத்தை தயாரித்த  தயாரிப்பாளராக தான் முதலீடு செய்த தொகையை காப்பாற்றிக்கொள்ளும் நடிகர் சூர்யாவின் முடிவிற்கு திரையுலகில் ஆதரவை விட அதிகம் எதிர்ப்பலைகளே எழுந்துள்ளன.  
அதிக எதிர்ப்பலைகளுக்கு மத்தியிலும் ஒரு சிலரின் ஆதரவுக்கு குரல்கள் சூர்யாவை நிலைகுலையாமல் இருக்க வைத்திருக்கையில், 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவும் சூர்யாவிற்கான ஆதரவுக் குரலாய் தனது அறிக்கை ஒன்றை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார். அதில், "சமீப நாட்களில் ஓடிடிக்கு எதிரான பிரச்சினையை சூர்யாவுக்கு எதிரான தனி நபர் பிரச்சினையாக திசை திருப்பி விடப்பட்டுள்ளமை வருத்தத்துக்குரிய விசயமாகும்.

இதன் பின்னணியில் உள்ள அரசியலை நானும் அறிவேன், நீங்களும் அறிவீர்கள். திரைப்படத்தில் சம்பாதித்ததை திரைத்துறையிலேயே முதலீடு செய்பவர்களில் நடிகர் சூர்யாவும் ஒருவர்.

சூர்யா மற்றும் பெரிய நடிகர்கள் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகக் கூடாது. திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்ற உங்கள் எண்ணம் வரவேற்கக் கூடிய ஒன்றுதான். அதேநேரத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் முடக்கப்பட்டுள்ளது. அதை திரையில் கொண்டுவர முன் வருவீர்களா? போராடுவீர்களா? படைப்புகளிலும், தயாரிப்புகளிலும் தொழில்சுதந்திரம் வேண்டும். கட்டுப்படுத்த நினைக்கக் கூடாது.

என் நண்பர் சிவக்குமாரின் வளர்ப்பும், வாழ்வியல் முறையையும் பார்த்து கர்வப்பட்டுள்ளேன். சூர்யா, கார்த்தி இருவரும் என்வீட்டு முற்றத்தில் வளர்ந்தவர்கள். அவர்களின் மனித நேயப்பண்பும், நேர்மையும் ஒழுக்கமும் நான் நன்கு அறிவேன். இவர்கள் தமிழ் திரைக்கு கிடைத்த பொக்கிஷங்கள். இவர்கள் நம் வீட்டுப் பிள்ளைகள். பெருமைப்படுங்கள். இவர்களை மட்டுமில்லை எந்த ஒரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள். மனம்வலிக்கிறது.

இனி தனி நபர் தாக்குதல் வேண்டாம். தயாரிப்பாளர்கள் நல்ல நிலையில் இருந்தால் தான், இதை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வு செழிக்கும். தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களே வாருங்கள் பேசித்தீர்ப்போம். ஒற்றுமையுடன் செயல்படுவோம்.

கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் திரைப்படத்தைக் காண ஓடிடி சிறந்த தளமாக இருக்கும் என்கின்ற நல்லெண்ணதில் சூர்யா எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்க கூடியதாகும். சூர்யா மிரட்டியுள்ள "சூரரைப்போற்று" திரை முன்னோட்டம் பார்த்து வியந்தேன். இந்த திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் முத்திரைபதிக்கும். தமிழனைப் போற்றும்" என்று குறிப்பிட்டு தனது முடிவை உறுதிப்படுத்தியுள்ளார் பாரதிராஜா.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top